கொரோனா காலத்தில் நுரையீரலை பலப்படுத்தும் ஆடாதோடை!

 

கொரோனா காலத்தில் நுரையீரலை பலப்படுத்தும் ஆடாதோடை!

நம் நாட்டு வைத்தியம் மற்றும் சித்த வைத்திய முறைகளில் சளி, இருமல் பிரச்னக்கு அதிக அளவில் பயன்படுத்தியது ஆடாதோடை மூலிகையைத்தான். சளி, இருமல், நுரையீரல் நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, காச நோய் என பல்வேறு பிரச்னைகளுக்கு ஆடாதோடை தீர்வாக உள்ளது.

கொரோனா காலத்தில் நுரையீரலை பலப்படுத்தும் ஆடாதோடை!

புதர் வகையைச் சேர்ந்தது ஆடாதோடை. இதன் இலைகள் பார்க்க மாவிலை போல இருக்கும். ஆனால், ஆடு கூட இந்த இலையை சாப்பிடாது. அதனால்தான் ஆடு தொடாத இலை என்று பெயர் வந்தது என்றும், பின்னர் அது மருவி ஆடாதோடை என்று ஆகிற்று என்று சொல்வார்கள்.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களும், கொரோனா வராமல் தடுக்க நினைப்பவர்களும் ஆடாதோடையை தினசரி சேர்த்துக்கொள்வது நல்லது.

ஆடாதோடை இலையை பறித்து, நன்கு அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து குடித்து வர வேண்டும். இப்படி செய்தால், ஆடாதோடையில் உள்ள நுண் சத்துக்கள் நுரையீரல் பாதையில் இருக்கும் நோய்த் தொற்றைத் தடுக்கும், நுரையீரலை பலப்படுத்தும், நுரையீரல் பாதையை விரிவடைய செய்யும்.

ஆடாதோடை இலை 15 – 20, அதிமதுரம், சித்தரத்தை சிறு துண்டு எடுத்து நன்கு பொடித்துக்கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் ஆடாதோடை இலை மற்றும் அதிமதுரம், சித்தரத்தையை சேர்த்து சுண்ட காய்ச்ச வேண்டும். இது ஆடாதோடை குடிநீர் என்று அழைக்கப்படும். இதை தினமும் குடித்து வந்தால் நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

தொண்டை, குரல் வளத்தை பாதுகாக்கும் அற்புத மூலிகை ஆடாதோடையாகும். சரியாக பேச்சு வராத குழந்தைகள், தொண்டை பிரச்னை உள்ளவர்கள் ஆடாதோடையை தொடர்ந்து எடுத்து வந்தால் தொண்டை பிரச்னைகள் சரியாகும். பேச்சு சீக்கிரம் வரம். குரல் இனிமையாக மாறும். குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன்பு சித்தா அல்லது ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.

நகரங்களில் ஆடாதோடை இலை கிடைப்பது மிகவும் அரிதானது. எனவே, சித்த மருந்து அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் ஆடாதோடை இலைப் பொடியாக கிடைக்கும். இதை வாங்கி பயன்படுத்தலாம். உணவு உண்ட பிறகு இந்த பொடியைத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பயன் கிடைக்கும்.