மார்பக அளவை அதிகரிக்கச் செய்யும் உணவுகள்!

 

மார்பக அளவை அதிகரிக்கச் செய்யும் உணவுகள்!

பல்வேறு காரணங்களுக்காக மார்பகங்கள் சற்று எடுப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லா சில பெண்களுக்கு உள்ளது. சிலர் பெரிய மார்பகம்தான் பெண்மையின் அடையாளம் என்று கருதுகின்றனர். அது அவர்களுக்கு தன்னம்பிக்கை, அழகைத் தருவதாக கருதுகின்றனர். இதனால் மார்பகத்தின் அளவை அதிகரிக்கும் அறுவை சிகிச்சைகள் நம் நாட்டிலும் அதிக அளவில் நடக்கத்தான் செய்கிறது.

மார்பக அளவை அதிகரிக்கச் செய்யும் உணவுகள்!

பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சி என்பது அவர்கள் வாழ்நாளில் 6க்கும் அதிகமான முறை மாற்றம் அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிகப் பெரியதாக மாறுவது என்பது தாய்மை அடைந்த பிறகு குழந்தைக்கு பாலூட்டும்போதுதான். மார்பகத்தின் அளவு என்பது மரபணு, உடற்பயிற்சி, வாழ்வியல் முறை, எடுத்துக்கொள்ளும் உணவு அடிப்படையில் பெண்களுக்கு பெண்களுக்கு மாறுபாடு கொண்டதாக உள்ளது.

அறுவைசிகிச்சை இன்றி இயற்கையான முறையில் நாம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகளை கூடுதலாக சேர்த்துக்கொள்வதன் மூலம் மார்பகங்களின் அளவை அதிகரிக்கச் செய்யலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. மார்பகங்களின் வளர்ச்சி என்பது ப்ரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜென் என்ற இரண்டு ஹார்மோன்கள் அளவைப் பொருத்து மாறுபடுகிறது. ஹார்மோன் சுரப்பு மற்றும் கிரகித்தல் நல்லபடியாக இருக்க ப்ரோமைன், மாங்கனீசு போன்ற நுண்ஊட்டச்சத்துக்கள் துணைபுரிகின்றன. ஹார்மோன்கன் சுரப்பைத் தூண்டும் சில உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

நாம் தினமும் பால் அருந்துகிறோம். பாலில் இனப்பெருக்க மண்டல ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரான் மற்றும் ப்ரோலாக்டின் உள்ளிட்டவை உள்ளது. இவை இனப்பெருக்க மண்டல உருப்புக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் மார்பக வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்கிறது. பால் மட்டுமின்றி சீஸ், யோகர்ட், தயிர், வெண்ணெய் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது மார்பக வளர்ச்சிக்கு உதவும். சோயா பால் அருந்தினாலும் இந்த பலன் கிடைக்கும். சோயாவும் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கச் செய்யக் கூடியதுதான்.

பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை உணவில் சேர்த்துக்கொள்வது வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் அதிக அளவில் கிடைக்க உதவும். வால்நட், முந்திரி, வேர்கடலை, சூரியகாந்தி விதை, பூசனி விதை, ஃபிளக்ஸ் விதை போன்றவை ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கச் செய்கின்றன.

எண்ணெய் சத்துள்ள மீன்கள், இறால், நண்டு போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் மாங்கனீசு அதிக அளவில் உள்ளன. இவை ஹார்மோன் செயல்பாட்டைத் தூண்டுகின்றன. இதனால் மார்பக வளர்ச்சி, இனப்பெருக்க மண்டல வளர்ச்சி மேம்படுகிறது.

கோழி இறைச்சியை உட்கொள்வதும் இனப்பெருக்க மண்டல செயல்பாட்டை மேம்படுத்த உதவும். கோழி இறைச்சியில் உள்ள ஊட்டச்சத்து ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால்தான் இளம் வயது பெண் குழந்தைகளுக்கு அதிக அளவில் கோழி இறைச்சி வழங்க வேண்டாம் என்று கூறுகின்றனர். அது மிக விரைவாக பூப்பெய்தலுக்கு காரணமாகிவிடுகிறது.

வெந்தயம் அந்தக் காலம் தொட்டே உடல் எடையைக் குறைக்கவும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர். தொடர்ந்து வெந்தயத்தை மருந்தாக உட்கொண்டு வந்தால் மார்பக அளவு அதிகரிக்கும்.