என்னது !விளக்கெண்ணெய்ல இத்தனை வியாதிகள் குணமாகுமா ?விளக்கமா சொல்றோம் படிங்க ..

 

என்னது !விளக்கெண்ணெய்ல இத்தனை வியாதிகள் குணமாகுமா ?விளக்கமா சொல்றோம் படிங்க ..

“அந்த ஆளு ஒரு விளக்கெண்ணெய் சார்…” என்று யாராவது, யாரையாவது சொல்லக் கேட்டிருப்போம். ஒருவரைக் குறைத்துச் சொல்வதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், விளக்கெண்ணெய் விசேஷமானது. விளக்கெண்ணெயை, ‘ஆமணக்கின் குருதி’ என்றுகூடச் சொல்லலாம். ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமானக் கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண் மருந்துகள்தான் விளக்கெண்ணெயில் கொட்டிக்கிடக்கின்றன. சுருக்கமாக, விளக்கெண்ணெய் ஒரு நலப்பொக்கிஷம்!

அப்படி சிறந்த குணங்கள் வாய்ந்த ஒரு எண்ணெய்தான், விளக்கெண்ணெய் என்று அழைக்கப்படும் ஆமணக்கு எண்ணெய்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாகவே இந்தியரிடம் மட்டும் அல்லாமல், சீனர்களிடமும், ரோமானியர்களிடமும், கிரேக்கர்களிடமும்கூட விளக்கெண்ணெயின் பயன்பாடு இருந்திருக்கிறது. 

மலசிக்கல்

சிலருக்கு எப்பொழுதும் மலச்சிக்கல் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு என்னதான், நவீன மருந்துகள், எடுத்துக் கொண்டாலும் அந்த மருந்துகள் வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள், விளக்கெண்ணெயில் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும்.

ஆனால், இந்த முறைய தினமும் கடைபிடிக்கக் கூடாது.

தோல் வியாதிகள்

தோலில் பல வகையான தொற்று வியாதிகளான சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு விளக்கெண்ணெய் சிறப்பாக செயல்படுகின்றது.

விளக்கெண்ணெய்யை சில துளிகளை இந்த சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு தடவி வந்தால் இந்த பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.

சுளுக்கு

நமது உடம்பின் சில பகுதிகளில் தசைகள் முறுக்கிக் கொள்வதால் சுளுக்கு ஏற்படுகின்றது. மேலும், உடலில் ஏதாவது ஒரு அடிபட்டாலும் அந்த இடம் வீங்கி விடுகின்றது.

விளக்கெண்ணெயின் சில துளிகளை வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி அந்த இடத்தின் மீது ஒத்தனம் கொடுக்க, வீக்கம் விரைவில் குறையும்.

பாத வெடிப்பு

உடலில் பித்தத்தன்மை அதிகமாகும் நபர்களுக்கு பாத வெடிப்புகள் அதிகம் ஏற்படும். இப்படிப்பட்ட நபர்கள், தினமும் உறங்கச் செல்லும் முன்பு விளக்கெண்ணை சில துளிகளை பாத வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் சரியாகும்.

தலைமுடி

அனைவருக்குமே தலைமுடி நன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். விளக்கெண்ணெயின் சில துளிகளை தேங்காய் எண்ணையுடன் கலந்து தலைமுடிக்கு தேய்த்து வந்தால், தலைமுடி உதிர்வது நிற்கும்.

மிக இளம் வயதிலேயே, தலைமுடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.

அடிபட்ட புண்கள்

உடலின் எப்பகுதியிலாவது சிராய்ப்புக்கள் போன்றவை ஏற்பட்டால், அந்த இடத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் நின்றாலும் நாளடைவில் அந்த இடம் புண்ணாகி விடுகின்றது.

விளக்கெண்ணெயின் சில துளிகளை, தினமும் அடிபட்ட புண்களின் மீது விட்டு வந்தால் புண்கள் விரைவில் குணமாகும்.

மூட்டு வலி

நடுத்தர வயது முதல் முதியோர்கள் வரை, அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக, மூட்டு வலி பிரச்சனை இருக்கின்றது.

தினமும் சில துளிகள் விளக்கெண்ணெய்யை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும்.

Arthritis போன்ற தீவிர மூட்டுகள் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கும்.

கண்

இன்று பெரும்பாலானவர்கள், பல மணி நேரம் தொடர்ந்து கணினி முன்பு அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் கண்களின் மீது அதிக அழுத்தம் ஏற்படுகின்றது.

இது எதிர்காலத்தில் கண் பார்வைத் திறனை பாதிக்கும். தினமும் சில துளி விளக்கெண்ணையை கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்க கண்கள் குளிர்ச்சி அடையும்.

மேற்கண்ட பலன்களை காட்டிலும் தொப்புளி விளக்கெண்ணெய் வைத்த நிறைய படங்கள் கிடைக்கும். நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புள் தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா?

குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது.

வாரம் ஒருமுறை தொப்புளில் விளக்கெண்ணெய் தடவி வாருங்கள். இதனால் உடல் சூடு குறையும். முழங்கால் மற்றும் மூட்டு வலிகள், கால் குடைச்சல் குணமாகிறது. நரம்பு பாதிப்பு அனைத்தும் குணமாகிறது.

ஆமணக்கு விதையில் இருந்து மருந்து செய்ய அந்தக் காலத்தில் அதன் பருப்பை அரைத்து, அதற்கு நான்கு மடங்கு இளநீர் அல்லது தண்ணீரைவிட்டுக் காய்ச்சுவார்கள். இப்போது பிற எண்ணெய்களைப்போல பிழிந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. 

நோய் குணமாக்கலில் `நிணநீர் கழிவு ஓட்டம்’ மிகமிக முக்கியமானது. உடலில் இந்த ஓட்டத்தைச் சீராக நடத்தி, எங்கும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் விளக்கெண்ணெய்க்கு நிகர் ஏதும் இல்லை. வெள்ளை அணுக்களை ஊக்குவிக்கும் தன்னிகரற்றச் செயலை இந்த எண்ணெய் செய்கிறது.