வைத்தியர் வீட்டையே மறக்க செய்யும் அத்தி பழம் .

நம்மில் பலருக்கு அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. . தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
நம்மில் பலருக்கு எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு நினைப்பவர்கள் இந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். இந்த உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவு. எனவே குறைந்த அளவே கொழுப்பை பெற முடியும். இதனால் உடல் எடை குறையும்.
உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தினமும் 3 அல்லது 4 அத்திப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கின்றது.இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். மேலும் இதனால் பசியின்மை பிரச்சனையும் நீங்கும்
அத்திப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் அதிகம் உள்ளது. மேலும் மற்ற பழங்களை விட இந்த அத்திபழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. .அதனால் நம் உடலுக்கு ஆற்றலும் தரும்.
தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இந்த இரத்த அழுத்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.
அத்தி பழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதால் அது புற்றுநோய்க்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கும். நம்முடைய உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை இது தடுத்து நம்மை பாதுகாக்கிறது.
இந்த அத்தி பழம் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்கிறது .இதனால் இதயத்திற்கு சீராக இரத்தம் செல்கிறது.எனவே நமக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம்.
அத்திப்பழம் நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.ஒரு அத்தி பழத்தில் 3% கால்சியம் உள்ளது. எனவே இது எலும்புகளுக்கு நல்லது .


