பித்தம் குறைஞ்சா நோய் மொத்தமும் குறையும் -பித்தம் குறைய பத்து வழிகள்
Mar 30, 2021, 16:51 IST1617103284000

- பித்தம் குறைய, ஆயுள் பெருக, இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் குறையும். ஆயுள் பெருகும்.
- பித்ததினால் வரும் மயக்கத்தை போக்க இஞ்சி சாறு, வெங்காய சாறு இரண்டையும் தேன் கலந்து சாப்பிட்டு வர பித்தம் மயக்கம் தெளியும்.
- பழுத்த மாம்பழத்தை எடுத்து சாறு எடுத்து லேசாக சூடேற்றி ஆற வைத்து பின் சாப்பிட்டால் பித்தம் குறையும்.
- எலுமிச்சை பழத்தை பிழிந்து சாதம் செய்து வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டு வர பித்தம் தணிக்கும்.
- ரோஜா பூவை கஷாயம் வைத்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர பித்த நீர் மலம் வழியே வெளியேறிவிடும்.
- பொன்னாவரை வேர், சுக்கு, சீரகம், மிளகு ஆகியவை சேர்த்து கஷாயம் போட்டு குடித்து வந்தால் பித்தபாண்டு தீரும்.
- விளாம்பழம் கிடைத்தால் தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
- நீங்கள் சாப்பிடும் உணவில் தினமும் அகத்திக்கீரை சேர்த்து கொண்டால் பித்தம் குறையும்.
- பனங்கிழங்கு கிடைத்தால் சாப்பிடுங்கள் பித்தம் குறையும்.
- 10.எலுமிச்சை இலையை மோரில் கலந்து ஊற வைத்து அதை உங்கள் உணவில் தினமும் சேர்த்து பயன்படுத்தி வர பித்தம் தணிக்கும்.



