தோல் சுருக்கம் நீங்கி இளமையான முகத்துக்கு பயன்தரும் கடுக்காய் பொடி

 

தோல் சுருக்கம் நீங்கி இளமையான முகத்துக்கு பயன்தரும் கடுக்காய் பொடி

கடுக்காய் பொடி இது நம்ம நாட்டு மருந்துகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. இது மலம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் பயன்படுகிறது

கடுக்காய் பொடி இது நம்ம நாட்டு மருந்துகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. இது மலம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் பயன்படுகிறது.

கடுக்காய் பொடியின் நன்மைகள் :
உடல் வலுப்பெற வேண்டும் என்று எண்ணுபவர்கள் கடுக்காய்ப்பொடியை இரவு உணவு உண்ட பின் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து தின்று விட்டு பின் ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால் உடல் வலுப்பெறும்.

kadukkai

மலச்சிக்கல் மற்றும் ஜீரண சக்தி குறைபாடு உள்ளவர்கள் 3 கடுக்காய் தோலுடன் சிறிது இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து நெய்யில் வதக்கி அதை ஒரு துவையலாக செய்து கொள்ளவும்.பின் அதை சாதத்துடன் சேர்த்து உணவில் சேர்த்துக் கொள்வதால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் ஓடிவிடும்.

பித்தம் மற்றும் வாத நோய் உள்ளவர்கள் கடுக்காய் தூளுடன் சிறிது சுக்கு, திப்பிலி எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம் உணவில் சேர்த்துக் கொண்டால் அனைத்து நோய்களும் குணமாகும்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்று கோளாறு உள்ளவர்கள் சிறிது கடுக்காய்தோலுடன் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.அந்த கொதித்த நீரை அதிகாலையில் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

kadukkai

உடல் பலம் பெற நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு ரகசிய குறிப்புதான் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் பெறும்.

kadukkai

வயதான தோற்றத்தில் அவதிப்படுபவர்கள் கடுக்காய்பொடியுடன் சிறிது தேன் கலந்து ஒரு ஆண்டு முழுவதும் காலையில் உண்ண வேண்டும்.

இது போல் நீங்கள் செய்வதால் உங்களுக்கு வந்துள்ள வயதான தோல் சுறுக்கம், முதுமைத் தன்மை மற்றும் நரை முடி போன்றவை அனைத்தும் குணமாகும்.