சர்க்கரை நோயாளிகள் ஏன் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

 

சர்க்கரை நோயாளிகள் ஏன் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, பெரும்பாலும் எந்த ஒரு நோய் பாதிப்பு வந்தாலும், உடலை ஆரோக்கியமாக ஃபிட்டாக வைத்திருக்கவும் உடற்பயிற்சி அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க, கெட்ட எல்.டி.எல் கொழுப்பு மற்றும் டிரைகிளசரைட் அளவை கட்டுக்குள் வைக்க, தசைகள் – எலும்புகளை உறுதியாக வைக்க, மன அழுத்தம் குறைக்க உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் ஏன் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பு குறைவு அல்லது இன்சுலின் செயல் திறன் குறைவு காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதைக் கட்டுக்குள் கொண்டு வர உடற்பயிற்சி அவசியமாக உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் கார்டியோ பயிற்சி மட்டுமின்றி வெயிட் பயிற்சிகள் செய்ய வேண்டும். ஏரோபிக் பயிற்சியானது இசைக்கு ஏற்ப கைகள், கால்களை அசைத்து செய்யக் கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாக மகிழ்ச்சியான மன உணர்வுடன் உடற்பயிற்சி செய்யலாம். நீச்சல், வாக்கிங், சைக்கிளிங் போன்ற பயிற்சிகள் செய்வது மனதுக்கும் உடலுக்கும் ஓய்வை வழங்கும்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதிகப்படியான கலோரி எரிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதன் காரணமாக இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது, மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வதன் தேவையும் குறையும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் முழுவதுக்குமான ரத்த ஓட்டம் சீராகிறது.

சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. வாக்கிங், ஜாகிக், ஜூம்பா – நடனம், சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.

சர்க்கரை நோயாளிகள் எளிய உடற்பயிற்சிகளை அவர்களாக செய்யலாம். கடினமான, வெயிட் பயிற்சிகள் தொடங்குவதற்கு முன்பு சர்க்கரை நோய் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகர் ஆகியோரிடம் ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் செயல்படுவது நல்லது.