சித்தரத்தையோடு அமுக்கிரா கிழங்கை பொடியாக்கி சாப்பிட்டா எந்தெந்த நோய் தவிடுபொடியாகும் தெரியுமா ?

 
sitharaththi


சித்தரத்தை சளி மற்றும் , கபத்தை அறவே அகற்றும் தன்மையுடையது . மேலும் இது உடல் வெப்பத்தை அகற்றி ஆரோக்கியத்தினை அள்ளி தரும் குணமடையது . இது பசியை தூண்டி ,மணம் தருவதால் , செரிமான த்துக்கு உதவுவதால்  சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் மருத்துவ உலகில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும்.
 சித்தரத்தை. அந்த அரத்தைய பொடியாக்கி 2-4 கிராம் எடுத்து, தேன் கூட கலந்து டெய்லி ரெண்டு வேளை சாப்பிட்டா, சளி கிளியெல்லாம் பறந்துடும். 

sitharathai plant image


நெஞ்சு சளி, கோழை, ஈளை, இருமல், நாட்பட்ட கபம்னு எல்லாத்தையும் குணமாக்குற சக்திவாய்ந்தது இந்த அரத்தை. அரத்தைய கசாயம் போட்டு குடிச்சா, நுரையீரல்-தொண்டை நோயெல்லாம் ஓடிப்போகும்.

இஞ்சி குடும்பத்தை சேர்ந்த இந்த அரத்தைய தட்டி, 350 மிலி வெந்நீர்ல 3 மணிநேரம் ஊற வச்சு, வடிகட்டி 22 மிலி – 44 மிலி தேன் கலந்து குடிச்சு வந்தாலும் சளி இருமலெல்லாம் சரியாகும்.”


சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு பனங்கற்கண்டை தூளாக்கி இவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் யாவும் சரியாகிவிடும்.

இடுப்பில் தண்டுவட எலும்புகள் முடியுமிடத்தில், சிலருக்கு கடும் வலி தோன்றி, இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருவர். அவர்கள், அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து தேய்க்க, சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வரும், அதை எடுத்துக் கொண்டு, சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த கலவையை இளஞ்சூட்டில், இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவி வர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.

எலும்புகள் பலம் பெற நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என  நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, வலி குறைந்து நல்ல பலன் அளிக்கும்.

சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று டம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, இருமல் .தொண்டை கரகரப்பு நீங்கி நல்ல நிவராணம் அளிக்கும்.

குழந்தைகளை குளிக்கவைத்து தலைதுவட்டிய பின்பு, சிறிதளவு சித்தரத்தை தூளை அவற்றின் தலை உச்சியில் தேய்த்தால் சளி பிடிக்காது.
சித்தரத்தை தூளை, தேனில் கலந்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர, தொண்டை புண் ,தொண்டை வலி ,இருமல் போன்றவை விரைவில் குணமாகும்.