‘3 ஆண்டுகளாக மகளை பாலியல் வன்கொடுமை’ : தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

‘3 ஆண்டுகளாக மகளை பாலியல் வன்கொடுமை’ : தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

நீலகிரி அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் கோத்தர்வயல் பகுதியில் வசித்து வந்தவர் அப்துல் நாசர் (44). இவர் துணி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஒரு மகனும் 11 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார் அப்துல் நாசர். இதை அம்மாவிடமோ அல்லது உறவினரிடமோ கூறினால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

‘3 ஆண்டுகளாக மகளை பாலியல் வன்கொடுமை’ : தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

இப்படியே, 3 ஆண்டுகளாக மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.சிறுமியும் இதனை தாயிடம் சொல்லவில்லையாம். ஒரு முறை கேரளாவில் இருக்கும் தனது தாத்தா வீட்டுக்கு சென்ற சிறுமி, தாத்தாவிடம் பாலியல் வன்கொடுமையை பற்றி கூறியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த தாத்தா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த நிலையில், சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது அம்பலமாகியுள்ளது.

‘3 ஆண்டுகளாக மகளை பாலியல் வன்கொடுமை’ : தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூடலூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அப்துல் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக அம்மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அப்துல் நாசருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், அவருக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தனர்.