‘மனைவி அம்மா வீட்டுக்கு சென்ற கேப்பில் இரண்டாவது திருமணம்’ : ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

‘மனைவி அம்மா வீட்டுக்கு சென்ற கேப்பில் இரண்டாவது திருமணம்’ : ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(32). இவர் திண்டிவனத்தை சேர்ந்த மஞ்சுளா (25) என்ற பெண்ணை காதலித்து கடந்த 2010ஆ ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான பிறகு மஞ்சுளாவை தனது வீட்டுக்கு அழைத்து செல்லாத ராஜேஷ்குமார், அவரது தாயார் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்னைக்கு சென்றிருக்கிறார். மாதத்துக்கு ஒருமுறை வந்து செல்வதுமாக இருந்திருக்கிறார்.

‘மனைவி அம்மா வீட்டுக்கு சென்ற கேப்பில் இரண்டாவது திருமணம்’ : ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

இதனிடையே, மஞ்சுளா கருவுற்ற நிலையிலும் மாத்திரை வாங்கி கொடுத்து கருவைக் கலைத்துள்ளார் ராஜேஷ்குமார். இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு மஞ்சுளாவை சென்னைக்கு அழைத்துச் சென்ற ராஜேஷ்குமார், மஞ்சுளா தனது தாயார் வீட்டுக்கு சென்று திரும்பும் யாப்பில் கோமதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மஞ்சுளாவுக்கும் ராஜேஷ்குமாருக்கும் சண்டை மூண்டுள்ளது. சண்டையின்போது மஞ்சுளாவை சாதிப் பெயர் சொல்லி தகாத வார்த்தையில் திட்டியிருக்கிறார் ராஜேஷ்குமார்.

‘மனைவி அம்மா வீட்டுக்கு சென்ற கேப்பில் இரண்டாவது திருமணம்’ : ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

இது குறித்து, மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. முதல் மனைவியை ஏமாற்றி விட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு ரூபாய் 1000 அபராதமும் விதித்தது. இதையடுத்து, ராஜேஷ்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.