வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு…. எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு…. எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் நம் நாட்டின் மிகப்பெரிய வீட்டுவசதி அடமான கடன் நிறுவனங்களில் ஒன்றாகும். எல்.ஐ.சி.யின் (லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) துணை நிறுவனம்தான் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ். அந்நிறுவனம் கடந்த ஜனவரி- மார்ச் காலாண்டுக்கான தனது நிதிநிலை முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு…. எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.421.43 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 39.24 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.693.58 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ள போதிலும் லாபம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு…. எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்

2020 மார்ச் காலாண்டில் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,920.17 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.4,655.14 கோடியாக இருந்தது. ஆக, கடந்த மார்ச் காலாண்டில் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர வருவாய் 5.69 சதவீதம் அதிகரித்துள்ளது.