விடுதலை விவகாரம்: சசிகலாவை சந்திக்கும் டிடிவி தினகரன்

 

விடுதலை விவகாரம்: சசிகலாவை சந்திக்கும் டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் திடீரென டெல்லிக்கு பறந்தார். காலையில் தனி விமானம் மூலம் டெல்லி சென்று மாலையில் சென்னைக்கு திரும்பினார்.

அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மூத்த வழக்கறிஞர் ஒருவரை சந்தித்த அவர், சசிகலா விடுதலை தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

விடுதலை விவகாரம்: சசிகலாவை சந்திக்கும் டிடிவி தினகரன்

2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதிதான் சசிகலா விடுதலையாவார் என்ற தகவல் வெளி வந்த நிலையில், எப்படியும் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் விடுதலை பெறச் செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

அபராதத் தொகை ரூ.10 கோடியை செலுத்துவதற்காக சசிகலா தரப்பில் செய்யப்பட்ட மனுத்தாக்கல்,நன்னடத்தை வழிமுறைப்படி சசிகலாவை சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலையாக சிறை நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை கடிதம் மற்றும் சசிகலாவில் உடல் நிலை குறித்து அவர் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

விடுதலை விவகாரம்: சசிகலாவை சந்திக்கும் டிடிவி தினகரன்

உள்கட்சிப் பிரச்சனை பெரிதாக இருக்கும் இந்த வேளையில், வரும் அக்டோபர் மாதத்தில் சசிகலா விடுதலயானால்தான் வெளியில் வந்து சற்று ஓய்வுக்குப் பின்னர் அவர் அரசியல் பணிகளை தொடங்க முடியும். இதுவல்லாமல் தேர்தல் நெருங்கும் வேளையில், அவர் ஜனவரி மாதம் விடுதலையானால் தேர்தல் பணிகளை நினைத்தது போல் வெற்றிகரமாகச் செயல் படுத்த முடியாது என்று சசிகலா தரப்பினர் கருதுகின்றனர்.இதன் காரணமாகத்தான் டிடிவி தினகரன் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

விடுதலை விவகாரம்: சசிகலாவை சந்திக்கும் டிடிவி தினகரன்

இதனைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர் நாளை 23-ந் தேதி புதன்கிழமை பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்திக்க ஏற்பாடாகி உள்ளது.டெல்லியில் மூத்த வழக்கறிஞரை சந்தித்த விஷயங்களை பரிமாறிக் கொள்வதோடு சசிகலா தரப்பு அடுத்தகட்ட பணிகள் பற்றியும் அவர் பேசவுள்ளதாகத் தெரிகிறது.
-செங்கை ‘போஸ்’