கர்நாடக சிறைத்துறையிடம் விளக்கம் கேட்போம்! – சசிகலா வழக்கறிஞர் பேட்டி

 

கர்நாடக சிறைத்துறையிடம் விளக்கம் கேட்போம்! – சசிகலா வழக்கறிஞர் பேட்டி

சசிகலா இந்த மாத இறுதியில் விடுதலையாக வேண்டியவர்… எதற்காக அவரை அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையில் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக சிறைத்துறையிடம் விளக்கம் கேட்போம் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சிறைத்துறையிடம் விளக்கம் கேட்போம்! – சசிகலா வழக்கறிஞர் பேட்டி


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக சிறையில் உள்ளனர். சிறை விதிகள் அடிப்படையில் இந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் சசிகலா விடுதலையாவார் என்று கூறப்பட்டது. செப்டம்பர் 15 தேதி ஆகியுள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

கர்நாடக சிறைத்துறையிடம் விளக்கம் கேட்போம்! – சசிகலா வழக்கறிஞர் பேட்டி


இந்த நிலையில் சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத் துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி பிப்ரவரி மாதம் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இது குறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அப்போது அவர், “சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர் 1997 மற்றும் 2014ம் ஆண்டுகளில் மொத்தம் 35 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். 17 நாட்கள் பரோலில்

கர்நாடக சிறைத்துறையிடம் விளக்கம் கேட்போம்! – சசிகலா வழக்கறிஞர் பேட்டி

வந்துள்ளார். நன்னடத்தை விதிகள் அவருக்கு பொருந்தும். அவருடைய கோப்பை சிறைத்துறை நிர்வாகம் ஆய்வு செய்தாலே இந்த மாத இறுதியில் அவர் விடுதலை செய்யப்படுவார்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துப் பேச முடியவில்லை. அவரை சந்தித்து பேச அனுமதி கேட்டு சிறைத்துறை நிர்வாகத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை சந்தித்துப் பேசும் போதுதான் அவருடைய விடுதலைப் பற்றி அவரிடம் பேச முடியும். அதன் பிறகு கர்நாடக சிறைத்துறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு மனு செய்வோம். அதன் பிறகே, சசிகலா விடுதலையாகும் நாள் தெரியவரும்” என்றார்.