இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா!

 

இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா!

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா!

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 15வது நாளாக ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 42 ஆயிரத்து 640 பேருக்கு ஒருநாள் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 58 ஆயிரம், நேற்று 53 ஆயிரமாக இருந்த பாதிப்பு என்று 42 ஆயிரமாக ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,99,35, 221லிருந்து 2,99,77,861 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா!

இந்தியாவில் ஒரே நாளில் 81,839 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் குணமடைந்து எண்ணிக்கை 2,88,44,199 லிருந்து 2,89,26,038 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு குணமடைந்தோர் விகிதம் 96.49% ஆகவும் , உயிரிழப்பு விகிதம் 1.30% ஆகவும் உள்ளது.நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,62,521 ஆக குறைந்துள்ளது.இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,167 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை இந்தியாவில் 3,88,135 லிருந்து 3,89,302 ஆக அதிகரித்துள்ளது.