டாஸ்மாக் கடைகளில் மது இருப்பு குறைந்தது.. உயர் ரக மது மட்டுமே கிடைக்கும்!

 

டாஸ்மாக் கடைகளில் மது இருப்பு குறைந்தது.. உயர் ரக மது மட்டுமே கிடைக்கும்!

கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட்ட போது, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படாததால் 8 ஆம் தேதி டாஸ்மாக்கை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 45 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் இரண்டே நாட்களில் மூடப்பட்டது குடிமகன்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பாக மேல்முறையீடு செய்த நிலையில், டாஸ்மாக்குக்கு எதிரான தடை நீக்கப்பட்டது.

டாஸ்மாக் கடைகளில் மது இருப்பு குறைந்தது.. உயர் ரக மது மட்டுமே கிடைக்கும்!

அதே போல டோக்கன் கொடுக்கப்பட வேண்டும், 550 பேர் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நிற்க வேண்டும், சமூக விலகலை கட்டாயமாக பின்பற்ற வேண்டும், டோக்கன் தரும் இடமும் மது விநியோகம் செய்யும் இடமும் தனித்தனியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகளுடன் கடந்த 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டு விட்டன. இதனால் தினமும் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 நாட்களாக டாஸ்மாக் இல்லாமல் தவித்த குடிமகன்களுக்கு, மீண்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மது இருப்பு குறைந்தது.. உயர் ரக மது மட்டுமே கிடைக்கும்!

இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மதுபான ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் மது உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனால் டாஸ்மாக்குகளில் முன்னர் தயாரிக்கப்பட்ட மது மட்டுமே இருப்பில் இருந்தது. கடந்த சில நாட்களாக டாஸ்மாக் விற்பனை நடந்ததால், தற்போது 80% மது விற்பனை நடந்துள்ளது. குறிப்பாக ஊரக பகுதிகளில் ரூ.120 முதல் 140 விலையிலான மது விற்பனையே அதிகமாக நடந்துள்ளது. இதன் காரணமாக, குறைந்த விலை மதுபானங்கள் எல்லாம் விற்று தீர்த்துள்ளதாகவும், 180க்கு மேற்பட்ட விலையிலான பிரிமீயர் ரக மதுபானங்களே இருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.