வெட்டுக்கிளிகள் படியெடுப்பு தமிழகத்திற்கு வருமா? தமிழக வேளாண்துறை விளக்கம்

 

வெட்டுக்கிளிகள் படியெடுப்பு தமிழகத்திற்கு வருமா? தமிழக வேளாண்துறை விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே இன்னும் இந்தியா மீண்டு வரவில்லை. அதற்குள் மற்றொரு பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகமாக இருப்பதாகவும், அவரை பயிர்களை எல்லாம் சேதப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிக அளவில் இருக்கிறது. இது வழக்கமான ஒன்று தான் என்றும் ஆண்டு தோறும் கோடைக்காலத்தில் வெட்டுக்கிளிகள் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகள் படியெடுப்பு தமிழகத்திற்கு வருமா? தமிழக வேளாண்துறை விளக்கம்

இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் கென்யா, சோமாலியா உள்ளிட்ட நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவுக்கும் வரும் என்று ஐ நா அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி தமிழகத்துக்கு வரும் வாய்ப்பு மிகக்குறைவு என்று தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.