“திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல்” கமல் ஹாசன் சுட்டி காட்டும் முக்கிய வாக்குறுதி!

 

“திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல்”  கமல் ஹாசன் சுட்டி காட்டும் முக்கிய வாக்குறுதி!

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய முன்வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

“திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல்”  கமல் ஹாசன் சுட்டி காட்டும் முக்கிய வாக்குறுதி!

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் ஆகியவை மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாளிலிருந்தே நாங்கள் வலியுறுத்தி வரும் அம்சங்கள்.சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப் பிரச்சினைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களை சாமானியனும் அறிந்து கொள்ள உதவுவது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என கோரி 2012ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அதிமுக அரசு சாக்கு போக்கு சொல்லி நிலுவையில் போட்டுவிட்டது.

“திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல்”  கமல் ஹாசன் சுட்டி காட்டும் முக்கிய வாக்குறுதி!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என தன் அறிக்கையில் வாக்குறுதியில் (வாக்குறுதி எண் 325) திமுக தெரிவித்திருந்தது. ஆனாலும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வில்லை. இந்திய பாராளுமன்றத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கூட்டத்தொடர் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. கேரளா சட்டமன்ற நிகழ்வுகளில் வெப் ஸ்ட்ரீம் செய்யப்படுவதுடன் தனியாக யூட்யூப் சேனலும் உள்ளது.

“திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல்”  கமல் ஹாசன் சுட்டி காட்டும் முக்கிய வாக்குறுதி!

நடைபெறவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் மாமன்ற உறுப்பினர்களின் கருத்து என்னவாக இருக்க இருக்கின்றது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவியாக இருப்பதுடன், பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கக் கூடும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக அளவில் ஊடகவியலாளர்கள் சட்டமன்ற வளாகத்தில் கூடுவதை இந்த நேரடி ஒளிபரப்பு குறைக்கக்கூடும். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு இணையவழி நேரடி ஒளிபரப்பு செய்வது ஒரு சவாலான விஷயமாக இருக்காது. தங்கள் தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்த நேரடி ஒளிபரப்பை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே உறுதி செய்ய ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.