இன்றுடன் பரப்புரைக்கு எண்டு…அடுத்த முதல்வர் யார்?

 

இன்றுடன் பரப்புரைக்கு எண்டு…அடுத்த முதல்வர்  யார்?

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளாக காலூன்றி உள்ள திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கியது. இதனால் சில மாதங்களாக தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் விதமாக உருமாறியது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி நிலவுகிறது.

இன்றுடன் பரப்புரைக்கு எண்டு…அடுத்த முதல்வர்  யார்?

இதில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் திமுக வேட்பாளரான மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும் , அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கோவில்பட்டியிலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூரிலும் களம் காண்கின்றனர்.

இன்றுடன் பரப்புரைக்கு எண்டு…அடுத்த முதல்வர்  யார்?

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு இன்று இரவு 7 மணியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தந்த கட்சி சார்பில் ஆங்காங்கே தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.எது எப்படியோ தங்கள் நடவடிக்கைகள், தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட பல காரணங்கள் மக்கள் கண்முன் உள்ள நிலையில் மக்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.