நான்கு நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டம்? – சபாநாயகர் முக்கிய முடிவு என தகவல்!

நான்கு நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டம்? – சபாநாயகர் முக்கிய முடிவு என தகவல்!

தமிழக சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக சபாநாயகர் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் நான்கு நாள் மட்டுமே கூட்டத்தொடர் நடைபெறும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

நான்கு நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டம்? – சபாநாயகர் முக்கிய முடிவு என தகவல்!

தமிழக சட்டமன்றம் ஆறு மாத காலத்துக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும். இந்த காலக்கெடு வருகிற 23ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, அதற்கு முன்னதாக சட்டப் பேரவையைக் கூட்ட சபாநாயகர் தனபால் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போதைய நிலையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள சட்டப் பேரவையில் கூட்டத்தைக் கூட்டுவது சரியாக இருக்காது என்பதால், வேறு இடங்களில் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்துவது தொடர்பாக நேரில் சென்றும் ஆய்வு செய்யப்பட்டது.

நான்கு நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டம்? – சபாநாயகர் முக்கிய முடிவு என தகவல்!

இந்த நிலையில் குளிர்கால கூட்டத் தொடர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நான்கு நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
கலைவாணர் அரங்கில் சட்டப் பேரவை கூட்டத்தை நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளை பொதுப் பணித் துறையினர் செய்து வருகின்றனர்.

நான்கு நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டம்? – சபாநாயகர் முக்கிய முடிவு என தகவல்!

ஏற்பாடுகள் எதிர்பார்த்தபடி திருப்திகரமாக அமைந்துவிட்டால் இன்னும் இரண்டு நாட்களில் சட்டப் பேரவை கூட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் சட்டப் பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ-க்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.