ஏர் இந்தியா விமான நிறுவனம் ஊழியர்களை 5 ஆண்டுகள் ஊதியமின்றி விடுப்பில் அனுப்ப முடிவு!

 

ஏர் இந்தியா விமான நிறுவனம் ஊழியர்களை 5 ஆண்டுகள் ஊதியமின்றி விடுப்பில் அனுப்ப முடிவு!

ஏர் இந்தியா நிறுவனத்தில் சில பணியாளர்களை ஐந்து ஆண்டுகள் வரை சம்பளம் இல்லாமல் விடுப்பில் அனுப்ப அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் பல ஆண்டுகளாகவே கடுமையான நிதி சிக்கல்களில் இருந்துவருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு வரும் பணிகளை ஏர் இந்தியா நிறுவனத்தின் மூலமாகத்தான் மத்திய அரசு செய்து வருகிறது. இது கட்டண சேவையாக இருந்தபோதிலும் மக்களுக்கு பெரிய அளவில் ஏர் இந்தியா உதவிவருகிறது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் ஊழியர்களை 5 ஆண்டுகள் ஊதியமின்றி விடுப்பில் அனுப்ப முடிவு!

இந்நிலையில் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளது. அதன்படி நிறுவனத்தில் பணிபுரியும் சில ஊழியர்களை 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை ஊதியம் இல்லாத விடுப்பில் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேலை செய்யும் திறன், உடல் நலம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு ஊழியர்களை விடுப்பில் அனுப்பும் முடிவு எடுக்கப்பட உள்ளது. ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளும் மண்டல வாரியான இயக்குனர்களின் உதவியுடன் விடுப்பு வழங்கக்கூடிய ஊழியர்களை கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு ஆகும் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் தான் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பெரும்பாலான தனியார் விமான நிறுவனங்கள் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு போன்றவற்றை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.