பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை தனியார்மயமாக்கினால் விலைவாசி உயரும்… மார்க்சிஸ்ட் போராட்டம்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை தனியார்மயமாக்கினால் விலைவாசி உயரும்… மார்க்சிஸ்ட் போராட்டம்

விசாகப்பட்டிணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்,பாரத் பெட்ரொலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் நம் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனமாகும். இந்நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை தனியார்மயமாக்கினால் விலைவாசி உயரும்… மார்க்சிஸ்ட் போராட்டம்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியதாவது: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை தனியார்மயமாக்கினால் பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் மண்எண்ணெய் விலை உயரும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை தனியார்மயமாக்கினால் விலைவாசி உயரும்… மார்க்சிஸ்ட் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும், இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். மக்கள் எதிரான, தேசதுரோக கொள்கைகளை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்ட பேரணியில் பி.பி.சி.எல். நிறுவனத்தில் பணியாற்றும் சில ஒப்பந்த பணியாளர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.