நீங்க சோம்பேறியா? அப்ப கொரோனா தாக்காம பாத்துக்கொங்க!!

 

நீங்க சோம்பேறியா? அப்ப கொரோனா தாக்காம பாத்துக்கொங்க!!

சோம்பேறியாக இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தீவிரமாக இருக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமெடுத்துவருகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கிவருகிறது. தொற்று வேகத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக மத்திய அரசு, தடுப்பூசி விநியோகத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

நீங்க சோம்பேறியா? அப்ப கொரோனா தாக்காம பாத்துக்கொங்க!!

பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் ஸ்போர்ஸ் மெடிசின் என்ற இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில், “உடல் செயல்பாடுகள் இல்லாமல் சோம்பேறியாக இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அது தீவிரமாகி இறப்பு வரை கொண்டு செல்ல நேரலாம். தொற்று பாதொப்பு ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை உடலுக்கு எந்த பயிற்சியும் அளிக்காதவர்களே மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் வயோதிகம் அல்லது உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் தொற்று தீவிரமாக தாக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.