கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்

 

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்

ஈரோடு வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்
தீபாவளி 2020 சிறப்பு தள்ளுபடி விற்பனையினை
மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் இன்று துவங்கிவைத்தார்.

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய தூயபட்டு சேலைகள், உயர் ரக பருத்தி சேலைகள், போர்வைகள், வேட்டிகள், ஆடவருக்கான ஆயத்த சட்டைகள், சுடிதார் ரகங்கள் உள்ளிட்டவை ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வசந்தம் விற்பனை நிலையங்கள் மூலம் நடப்பு ஆண்டு தீபாவளிக்கு 2 கோடியே 70 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,30 சதவீத சிறப்பு தள்ளுபடியில் பொதுமக்கள் ஆடைகளை வாங்கி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்