மீண்டும் இந்திய எல்லைக்குள் முகாம் அமைக்கும் சீன ராணுவம்.. உறுதிப்படுத்தும் சாட்டிலைட் புகைப்படங்கள்

மீண்டும் இந்திய எல்லைக்குள் முகாம் அமைக்கும் சீன ராணுவம்.. உறுதிப்படுத்தும் சாட்டிலைட் புகைப்படங்கள்

கடந்த சில மாதங்களாக இந்திய எல்லையை ஆக்ரமிக்கும் முயற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அதனை இந்திய ராணுவம் வெற்றிக்கரமாக முறியடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் தனது படைகளை குவிக்க தொடங்கியதையடுத்து இந்திய ராணுவம் அந்த பகுதிகளில் தனது துருப்புகளை குவித்தது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பும் தங்களது படைகளை பின்வாங்க ஒப்புக்கொண்டன.

மீண்டும் இந்திய எல்லைக்குள் முகாம் அமைக்கும் சீன ராணுவம்.. உறுதிப்படுத்தும் சாட்டிலைட் புகைப்படங்கள்

இந்நிலையில் கடந்த 15ம் தேதியன்று இரவு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளதாக்கில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து திரும்பி போக செய்தனர். மேலும் அந்த பகுதியில் சீன ராணுவம் அமைத்து இருந்த டெண்டையும் இந்திய வீரர்கள் அழித்தனர். அன்று நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இருநாடுகளின் ராணுவ அதிகாரிகள் சந்திப்பின்போது எல்லையில் படைகளை பின்வாங்க முடிவு செய்தன.

மீண்டும் இந்திய எல்லைக்குள் முகாம் அமைக்கும் சீன ராணுவம்.. உறுதிப்படுத்தும் சாட்டிலைட் புகைப்படங்கள்

ஆனால் ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக சீன ராணுவம் படைகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கில் இந்திய பகுதியான கல்வான் பள்ளதாக்கு பகுதிக்கு சீன வீரர்கள் திரும்பி வந்துள்ளதையும், கடந்த ஜூன் 15ம் தேதியன்று இந்திய துருப்புக்களால் அழிக்கப்பட்ட கண்காணிப்பு இடுகைக்கு பதிலாக துப்பாக்கி நிலைகளுடன் கூடிய மிகப்பெரிய முகாமை அமைத்து வருவதையும் வர்த்தக சாட்டிலைட் புகைப்படங்கள் மற்றும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.