லஷ்மி விலாஸ் வங்கி பிரச்சினையும் – இந்திய வங்கிகளின் நெருக்கடிகளும்..

 

லஷ்மி விலாஸ் வங்கி பிரச்சினையும் – இந்திய வங்கிகளின் நெருக்கடிகளும்..

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் வாராக்கடன் காரணமாக மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. மிக முக்கிய தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் பொதுத்துறை வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை பெற்றுள்ளனர். அதை திருப்ப செலுத்தாமல் நிதி மோசடியில் ஈடுபடுவது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இந்திய வங்கிகள் மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து வருகின்றன.

லஷ்மி விலாஸ் வங்கி பிரச்சினையும் – இந்திய வங்கிகளின் நெருக்கடிகளும்..

விஜய் மல்லையா, நீரவ் மோடி, சந்தேசரா சகோதரர்கள் என பல தொழிலதிபர்கள் வங்கிகளில் கடன் பெற்று செலுத்தாமல், மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இது தவிர மிகப் பெரிய தொழில் நிறுவனங்களும் வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வாராக்கடன் வைத்துள்ளன. ஐஐஎப்எல், அனில் அம்பானியின் ரிலையன்ஸ், அதானி போன்ற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளன. குறிப்பாக ருச்சி சோயா போன்ற சில நிறுவனங்கள் வாராக்கடன் வைத்ததுடன், திவால் நிலைக்கு சென்று சொத்துக்களை விற்று கடனை மீட்கும் சூழல் வங்கிகளுக்கு உருவானது. இப்படியான சூழலில்தான் இந்திய வங்கித்துறை மிகப்பெரிய சீரழிவை கண்டு வருகிறது என்று கூறலாம். இந்த சீரழிவின் தொடர்ச்சிதான் லஷ்மி விலாஸ் வங்கியின் தற்போதைய நிலவரம்.

லட்சுமி விலாஸ் வங்கி

லஷ்மி விலாஸ் வங்கி பிரச்சினையும் – இந்திய வங்கிகளின் நெருக்கடிகளும்..

தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி சுமார் 94 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்டது. கரூரில் 1922ஆம் ஆண்டில், வி. எஸ். என். ராமலிங்கம் செட்டியார் என்கிற தொழிலதிபரால் இந்த வங்கி தொடங்கப்பட்டது. ஜவுளி உற்பத்தியாளர்களின் தேவைக்காக தொடங்கப்பட்ட இந்த வங்கி, அதன் பின்னர் தமிழகம், தென்னிந்தியா என விஸ்தரித்து தற்போது நாடு முழுவதும் கிளைகளை வைத்துள்ளது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மிகச் சிறப்பான வர்த்தகத்தை செய்து வந்த இந்த வங்கி, தற்போது மிக வாராக்கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், காபி டே, ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்துள்ளன. 2017ஆம் ஆண்டில் 2.67 சதவீதமாக இருந்த வாராக்கடன் விகிதம், கடந்த மார்ச் மாதத்தில் 25 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த கடன் வளர்ச்சி ரிசர்வ் வங்கி அனுமதித்த அளவை விட மிக அதிகமாகும். இது தவிர வங்கியின் வைப்பு நிதி 30,000 கோடி ரூபாயிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. இதுவும் வங்கியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

லஷ்மி விலாஸ் வங்கி பிரச்சினையும் – இந்திய வங்கிகளின் நெருக்கடிகளும்..

ஓராண்டாக நீடித்த குழப்பம் இரண்டு ஆண்டுகளாகவே வங்கியின் வாராக்கடன் அதிகரித்து வந்த நிலையில், வங்கியை சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி பரிந்துரைகளை வழங்கியது. புதிய முதலீடுகளை திரட்டுவதற்கான அவகாசத்தையும் வழங்கியிருந்தது. சுமார் ஓர் ஆண்டுக்கு மேலாக நீடித்து வந்த இந்த குழப்பத்துக்கு முடிவு கிடைக்காத நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கையாக வங்கியின் நிர்வாக கட்டுப்பாட்டை கையில் எடுத்துள்ளது. குழப்பங்களை தீர்த்து, நிதி நிலைமைகளை சரி செய்து வங்கி மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கையகப்படுத்திய பின்னர் சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய தனியார் வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 2,500 கோடி ரூபாய் நிதி மூலதனம் தேவைப்படும் என்பதால் இந்த தொகையை இந்தியாவில் இருந்து திரட்டும் சாத்தியமில்லை என வெலிநாட்டு வங்கியுடன் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது.

வங்கி ஊழியர் சம்மேளனங்கள் எதிர்ப்பு

லஷ்மி விலாஸ் வங்கி பிரச்சினையும் – இந்திய வங்கிகளின் நெருக்கடிகளும்..

இதற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் 33 கிளைகளுடன் இயங்கி வரும் டிபிஎஸ் வங்கியுடன், மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டுள்ள லட்சுமி விலாஸ் வங்கியை இணைப்பதன் மூலம் கிராமப்புற சேவை பாதிக்கப்படும் என கூறுகின்றனர். லஷ்மி விலாஸ் வங்கியின் சுமார் 60 சதவீத கிளைகள் கிராமத்திலும், சிறு நகரங்களிலும் உள்ளன. அதனால் ஒரு வெளிநாட்டு தனியார் வங்கியுடன் கிடைக்கும்போது கிராமப்புற சேவைகள் பாதிக்கப்படும். சுமார் 4,000 பணியாளர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என வங்கி சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

யெஸ் வங்கி சீர்கேடுகள்

லஷ்மி விலாஸ் வங்கி பிரச்சினையும் – இந்திய வங்கிகளின் நெருக்கடிகளும்..


இதே போன்றதொரு சூழல் கடந்த ஆண்டில் எஸ் வங்கிக்கு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வங்கியின் தலைவர் ரானா கபூரின் தவறான நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக, வங்கி மிகப்பெரிய வாராக்கடன் மோசடியில் சிக்கியது. தற்போது ரானா கபூர் சிபிஐ வழக்கினை எதிர் கொண்டு வருகிறார். வங்கி சீரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஒரு மூன்று மாதத்துக்குள் யெஸ் வங்கி செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில், பி எம் சி வங்கி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி விவகாரமும் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பி எம் சி வங்கி சுமார் 6,500 கோடி ரூபாய் வரை கடன் அளித்திருந்தது. வங்கியின் மொத்த சொத்து மதிப்பில், சுமார் 73 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்த பொழுது மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வங்கியையும் ரிசர்வ் வங்கி கையில் எடுத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியது தொடர்பாக, எழுந்த நிதி மோசடி புகாரின் அடிப்படையில்,ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சர் சிபிஐ வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மோசடிக்கு யார் காரணம்

லஷ்மி விலாஸ் வங்கி பிரச்சினையும் – இந்திய வங்கிகளின் நெருக்கடிகளும்..

இப்படி வங்கி நிர்வாகிகளும், தொழிலதிபர்களும், நிறுவனங்களும் கூட்டாக இணைந்து வாராக்கடன் மோசடியில் ஈடுபட்டு வருவதுதான் வங்கிகளின் நிதி நெருக்கடிக்கு மிகப்பெரிய காரணம் என வங்கி ஊழியர் சம்மேளனங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த கடன்களை கறாராக வசூலிக்க வேண்டும். கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியாவில் செயல்படும் அனைத்து தனியார் வங்கிகளையும் உடனடியாக பொதுத்துறை வங்கியான மாற்ற வேண்டுமென என வங்கி ஊழியர்கள் சம்மேளனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்திய வங்கி நிதி மோசடிகளின் பின்னணியில் உள்ள கோளாறுகளை இப்படியான அதிரடி நடவடிக்கைகள் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும் என்று கூறுவதையும் மறுப்பதற்கு இல்லை என்பதே பொதுமக்கள் கருத்தாக உள்ளது.