ரூ.57,785 கோடிக்கு ஆர்டர்களை அள்ளிய எல் அண்டு டி… ஆனாலும் லாபம் ரூ.3,197 கோடியாக குறைந்தது…

ரூ.57,785 கோடிக்கு ஆர்டர்களை அள்ளிய எல் அண்டு டி… ஆனாலும் லாபம் ரூ.3,197 கோடியாக குறைந்தது…

அடிப்படை கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்டு டி) கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,197 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 6.5 சதவீதம் குறைவாகும். வட்டி செலவினம் குறைந்துள்ள போதிலும் இந்நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது.

ரூ.57,785 கோடிக்கு ஆர்டர்களை அள்ளிய எல் அண்டு டி… ஆனாலும் லாபம் ரூ.3,197 கோடியாக குறைந்தது…

முடங்கிய வருவாய் வளர்ச்சி, அதிக நிதி, தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக செலவினம் காரணமாக எல் அண்டு டி நிறுவனத்தின் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனத்தின் செயல்பாடு வாயிலான மொத்த வருவாய் 2.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு ரூ.44,245.28 கோடியாக உயர்ந்துள்ளது.

ரூ.57,785 கோடிக்கு ஆர்டர்களை அள்ளிய எல் அண்டு டி… ஆனாலும் லாபம் ரூ.3,197 கோடியாக குறைந்தது…

2020 மார்ச் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனம் ரூ.57,785 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும். 2019-20ம் நிதியாண்டில் எல் அண்டு டி நிறுவனம் ஒட்டு மொத்த நிகரலாபமாக ரூ.9,549.03 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1.45 கோடியாக உயர்ந்துள்ளது.