கனிமொழி கிளப்பிய மொழி பிரச்னை… உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த சி.எஸ்.ஐ.எஃப் முடிவு

கனிமொழி கிளப்பிய மொழி பிரச்னை… உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த சி.எஸ்.ஐ.எஃப் முடிவு

தி.மு.க எம்.பி-க்கு இந்தி தெரியாதது பற்றி சி.எஸ்.ஐ.எஃப் அதிகாரி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை அதிக அளவில் பணியில் அமர்த்துவது என்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சி.எஸ்.ஐ.எஃப்) முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

கனிமொழி கிளப்பிய மொழி பிரச்னை… உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த சி.எஸ்.ஐ.எஃப் முடிவு
விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை போன்ற தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தமிழ் தெரியாத வீரர்கள், அதிகாரிகள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் விமான பயணிகளை நடத்தும் விதம் விமான பயணம் மேற்கொள்பவர்களுக்குத்தான் தெரியும். அதிலும் இந்தியிலேயே பேசி இம்சை செய்வது கொடுமையாக இருக்கும்.

கனிமொழி கிளப்பிய மொழி பிரச்னை… உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த சி.எஸ்.ஐ.எஃப் முடிவு
அன்மையில் விமானநிலையத்தில் தி.மு.க எம்.பி கனிமொழியிடம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் நீங்கள் இந்தியர்தானே உங்களுக்கு இந்தி தெரியாதா என்று கேட்டது தொடர்பாக புகார் எழுந்தது.
கனிமொழிக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், முன்னாள் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இதுபோன்ற சூழலை தானும் அனுபவித்துள்ளதாக ப.சிதம்பரம் கூறியிருந்தார். பிரச்னை பெரித

கனிமொழி கிளப்பிய மொழி பிரச்னை… உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த சி.எஸ்.ஐ.எஃப் முடிவு
இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று சி.எஸ்.ஐ.எஃப் தெரிவித்தது.
இந்த நிலையில் விமானநிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை அதிக அளவில் பணியில் அமர்த்துவது என்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படை முடிவு செய்துள்ளதாக செய்தி வௌியாகி உள்ளது.

கனிமொழி கிளப்பிய மொழி பிரச்னை… உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த சி.எஸ்.ஐ.எஃப் முடிவு

இதன் மூலம் மொழி தொடர்பான பிரச்சினையைத் தவிர்க்க முடியும் என்று அது நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால் விமான நிலையங்களில் பயணிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள், அவமரியாதைக்கு முடிவு வரும்.