சிராக் பஸ்வானும், தேஜஸ்வி யாதவும் கூட்டணி அமைக்க ஒன்றாக வர வேண்டும்.. லாலு பிரசாத் யாதவ் விருப்பம்

சிராக் பஸ்வானும், தேஜஸ்வி யாதவும் கூட்டணி அமைக்க ஒன்றாக வர வேண்டும்.. லாலு பிரசாத் யாதவ் விருப்பம்

சிராக் பஸ்வானும், தேஜஸ்வி யாதவும் கூட்டணி அமைக்க ஒன்றாக வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நான் சரத் பவாரின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நாடாளுமன்றம் அவர் இல்லாமல் வெறிச்சோடி விட்டது. நாங்கள் மூன்று பேரும் (சரத் பாய், முலாயம் சிங் மற்றும் நான்) பல பிரச்சினைகளுக்காக போராடினோம். முலாயம் சிங் யாதவுடனா எனது நேற்றைய (நேற்று முன்தினம்) சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

சிராக் பஸ்வானும், தேஜஸ்வி யாதவும் கூட்டணி அமைக்க ஒன்றாக வர வேண்டும்.. லாலு பிரசாத் யாதவ் விருப்பம்
தேஜஸ்வி யாதவ்

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும். லோக் ஜன்சக்தி கட்சியில் என்ன நடந்தாலும், சிராக் பஸ்வான் தலைவராக தொடர்கிறார். சிராக் பஸ்வானும், தேஜஸ்வி யாதவும் கூட்டணி அமைக்க ஒன்றாக வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிராக் பஸ்வானும், தேஜஸ்வி யாதவும் கூட்டணி அமைக்க ஒன்றாக வர வேண்டும்.. லாலு பிரசாத் யாதவ் விருப்பம்
சிராக் பஸ்வான்

லோக் ஜன்சக்தி கட்சி உட்கட்சி பூசலால் 2 பிரிவாக வெடித்துள்ளது. சிராக் பஸ்வான் தலைமையில் ஒரு பிரிவும், சிராக் பஸ்வானின் சொந்த சித்தப்பா பசுபதி குமார் பராஸ் தலைமையில் ஒரு பிரிவும் செயல்பட்டு வருகிறது. லோக் ஜன்சக்தி கட்சியின் உள்கட்சி நெருக்கடியை தீர்க்க பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை அணுக சிராக் பஸ்வான் முயன்று வருகிறார். ஆனால் பிரதமரும், பா.ஜ.க.வும் லோக் ஜன்சக்தி கட்சி விவகாரத்தில் தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.