‘உங்களால்தான் கட்சிக்கு கேட்ட பெயர்; நீங்கள் கே.என்.நேருவின் கைக்கூலி’!- கொந்தளிப்பால் கூட்டத்திலிருந்து வெளியேறிய திருச்சி மா.செ குமார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகளும், தொண்டர்களும் மோதிக்கொண்டனர். கூட்டத்தில் சாதி பிரச்னை ஏற்பட்டதால் அங்கிருந்து எஸ்கேப் ஆனார் குமார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அண்மையில் மாவட்டங்கள் அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவித்தனர் இவர்கள். அந்தவகையில் திருச்சி கிழக்கு,மேற்கு மற்றும் துறையூர் தொகுதிகளைக் கொண்ட திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டார். அடுத்ததாக மணப்பாறை, திருவெரம்பூர், லால்குடி தொகுதிகளைக் கொண்ட புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி குமார் நியமிக்கப்பட்டார்.


திருச்சி ஸ்ரீரங்கம், முசிறி மணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளைக் கொண்ட திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பால் அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. புறநகர் மாவட்டச்செயலாளராக குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முதல்வரையும், துணைமுதல்வரையும் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்களாம்.

இந்தநிலையில், புறநகர் மாவட்டச் செயலாளராக முன்னால் எம்.பி குமார் பதவி ஏற்ற பின்பு கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க லால்குடிக்கு வந்தார். அந்தப் பகுதி அதிமுக ஒன்றிய செயலாளராக சூப்பர் நடேசன் இருந்து வருகிறார். அவர் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். முன்னாள் ஒன்றிய செயலாளரான குணசீலன் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்குள் நீண்ட நாட்களாகப் பிரச்னை நீடித்துவருகின்றன. இந்த நிலையில் மாவட்ட செயலாளர் குமார் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் குணசீலனின் ஆதரவாளர்கள். சூப்பர் நடேசன் இன்று வரையிலும் கட்சியில் பெரிதாக செயல்படாதவர். அவரை ஒன்றியச்செயலாளர் பதவியிலிருந்து தூக்கினால் தான் இப்பகுதியில் கட்சியை வளர்க்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பதிலுக்கு நடேசனின் ஆதரவாளர்கள், “உங்களைப் போன்றோர்களால் தான் கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது என்றும், உங்களை அடிப்படை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கொந்தளித்திருக்கிறார்கள். பதிலுக்குக் குணசீலனின் ஆதரவாளர்கள், “நீங்கள் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் கைக்கூலி” என்று சொல்ல இரு தரப்பினருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகளைச் சமாதானப்படுத்த முடியாமல் மாவட்டச்செயலாளர் குமார் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இடத்தை விட்டு அவசர அவசரமாக காரில் ஏறிச் சென்றுவிட்டார். தேர்தல் நெருங்கும் நேரத்தில், அதிமுக கட்சி நிர்வாகிகளைச் சமாதானம் செய்ய முடிக்க முடியாதவர் எப்படி கட்சிக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படி வெற்றி பெறப்போகிறார் என்று அங்கிருந்த தொண்டர்கள் புலம்பி வருகிறார்கள்.

இவர்கள் இருவருக்குள் நீண்டநாட்களாக பிரச்னை நீடித்துவருகிறது. இப்பிரச்னை கட்சிக்குள் கள்ளரா, முத்தரையரா என்ற ஜாதி ரீதியான புதுப் பிரச்னை உருவாகிக்கொண்டிருக்கிறது. இவ்விவகாரத்தை மாவட்டச்செயலாளர் சுமுகமாகப் பேசிமுடித்தால் நல்லது இல்லையேல் தேர்தல் நேரத்தில் கடுமையாக எதிரொலிக்கும் என்று ஆதங்கப்படுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

Most Popular

கன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

வேலூரில் மேலும் 206 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 6,805 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

புதுக்கோட்டையில் மேலும் 140 பேருக்கு கொரோனா : விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,238ஆக அதிகரிப்பு !

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை இன்று கோலாகலமாக நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் ராம பிரான் குறித்த சிந்தனை சில !

மகா விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் அதிக ஆகர்ஷம் மிக்கது ராமாவதாரம் . பிற அவதாரங்களை விட ராமருக்கு அதிக அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன . எல்லா ஊர்களில் கிராமங்கள் நகரங்கள் என்ற...