சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த துணைநிலை ஆளுநர் காலமானார்!

 

சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த துணைநிலை ஆளுநர் காலமானார்!

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லட்சத்தீவு துணை நிலை ஆளுநரும், உளவுத்துறை முன்னாள் தலைவருமான தினேஷ்வர் சர்மா காலமானார்.

லட்சத்தீவுகளின் நிர்வாகத் தலைவராக பணியாற்றிவந்த தினேஷ்வர் சர்மா இன்று காலமானார். பீகாரை சேர்ந்த தினேஷ்வர் சர்மா, 1976 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் தேர்வானவார். இவர் புலனாய்வுத்துறையின் இயக்குநர் உட்பட பல முக்கிய பணிகளில் பணிபுரிந்துள்ளார். மேலும் உளவுத்துறை முன்னாள் தலைவராகவும் தினேஷ்வர் சர்மா இருந்துள்ளார்.

சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த துணைநிலை ஆளுநர் காலமானார்!

தினேஷ்வர் சர்மாவின் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவர் தினேஷ்வர் சர்மா காலமானதை கேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன். அவர் காவல்துறை பணியில் அர்ப்பணிப்புமிக்க அதிகாரியாக மிகுந்த பக்தியுடன் சேவை செய்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்தார்.

பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், “லட்சத்தீவின் நிர்வாகி ஸ்ரீ தினேஷ்வர் சர்மா ஜி இந்தியாவின் காவல்துறையில் நீண்டகால பங்களிப்புகளை வழங்கினார். அவர் தனது போலீஸ் வாழ்க்கையில் பல முக்கியமான எதிர் பயங்கரவாதங்களை கையாண்டார். அவரது மறைவால் வருத்தமடைகிறென். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.