‘ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை’ 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி,கால்வாய்களை மீட்டெடுத்த கிராம மக்கள்!

‘ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை’ 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி,கால்வாய்களை மீட்டெடுத்த கிராம மக்கள்!

காரைக்குடி அருகே ரியஸ் எஸ்டேட்க்காரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த ஏரி, கால்வாய்களை ஆட்சியரின் உதவியுடன் கிராம மக்கள் மீட்டெடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கிறது கே.வேலங்குடி கிராமம். அந்த கிராமத்தில் ஊரை சுற்றிலும் 5 கண்மாய்கள் என ஒரு காலத்தில் விளைச்சல் ஏக போகமாக இருந்தது. ஆனால் கால போக்கில் அந்த கண்மாய்கள் ஆக்கிரமிப்புகளால் வரண்டு போனது. அண்மையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது, வறண்டு காணாமல் போன கண்மாய்களை மீட்டெடுக்க முடிவெடுத்த அக்கிராம இளைஞர்கள், முதற்கட்டமாக அங்கிருந்த கருவேல மரங்களை அகற்றினர். மேலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக மண்டிக் கிடந்த முட்புதர்களையும் அகற்றினர்.

‘ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை’ 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி,கால்வாய்களை மீட்டெடுத்த கிராம மக்கள்!

அதே போல, காணாமல் போன அந்த 5 கண்மாய்களும் ரியல் எஸ்டேட்காரர்களின் நிலங்களுக்கு செல்லும் மண் சாலையாக இருந்ததால் அதனை மீட்டெடுக்க முயன்ற கிராம மக்கள் ஆட்சியர் ஜெயகாந்தனிடம் முறையிட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரிலும், கிராமமக்கள் பங்களிப்பு, கோட்டையூர் பேரூராட்சி, சாக்கோட்டை ஒன்றியம் என பல தரப்பினர் நிதியுதவி அளித்ததாலும் அந்த கண்மாய்கள் மீண்டும் தூர்வாரப்பட்டது. இதன் மூலமாக 155 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதால் அக்கிராம விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

‘ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை’ 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி,கால்வாய்களை மீட்டெடுத்த கிராம மக்கள்!

இது குறித்து பேசிய கிராம மக்கள், கிராம மக்கள் எல்லாரும் ஒன்றிணைந்து விவசாய பணியில் ஈடுபட உள்ளதாகவும் ஏற்கனவே கூட்டுறவு முறையில் 20 ஏக்கரில் விவசாயம் செய்து வரும் நிலையில் கண்மாய்கள் மீட்டெடுக்கப்பட்டதால் மழை நீரை அதில் சேமித்து 155 ஏக்கர் நிலத்தில் கூட்டு விவசாயம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.