லடாக் – இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார் ராஜ்நாத் சிங்

 

லடாக் – இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார் ராஜ்நாத் சிங்

லடாக் எல்லை நிலவரம் பற்றி மக்களவையில் இன்று அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்கிறார்.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த சில மாதங்களாக இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எல்லையில் அமைதியை குலைக்கும் வகையில் சீனா செயல்பட்டு வருவதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு விடுத்து சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்க கூடாது என சீனாவிடம் ராஜ்நாத்சிங் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

லடாக் – இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார் ராஜ்நாத் சிங்

பின்னர் இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து மாஸ்கோவில் நடந்த சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக இருநாட்டு இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சீன ராணுவம் கடந்த சில நாட்களாக எந்த வித அத்துமீறல்களிலும் ஈடுபடாமல் இருந்து வருகிறது.

லடாக் – இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார் ராஜ்நாத் சிங்

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் லடாக் எல்லை நிலவரம் பற்றி அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். சீன ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை விபரங்களை தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.