லடாக் எல்லை மோதல்: ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் மாயம் என தகவல்!!

 

லடாக் எல்லை மோதல்: ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் மாயம் என தகவல்!!

லடாக்கில் இந்திய சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் நிகழ்ந்த உயிரிழப்புகள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் ஏராளமான வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இருநாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

லடாக் எல்லை மோதல்: ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் மாயம் என தகவல்!!

இந்நிலையில் மோதலுக்கு பின் ஏராளமான இராணுவ வீரர்களை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. மோதல் நடைபெற்ற பகுதி சயோக் நதிக்கரை
என்பதால் இரவு நேரத்தில் படுகாயமடைந்த வீரர்கள் அந்த ஆற்றுக்குள் விழுந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்தப் பகுதி கரடுமுரடான மலை முகடுகள் கொண்ட பகுதி என்பதால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாகவும் எதிரிகளின் திடீர் தாக்குதல் காரணமாகவும் சில வீரர்கள் விழுந்து காயம்பட்டு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. காணாமல்போன வீரர்களை மீட்பதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளாது. சீன தரப்பிலும் பல வீரர்கள் காணாமல் போயுள்ளது நிகழ்ந்திருப்பதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களை மீட்பதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அது பலி எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.