பிரான்ஸில் லாக்டெளனும்… மிக நீளமான டிராபிக் சிக்கலும்

 

பிரான்ஸில் லாக்டெளனும்… மிக நீளமான டிராபிக் சிக்கலும்

கொரோனாவில் கோரப்பிடிக்குள் உலகமே சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனாவின் பரவல் இப்போது உலகில் அனைத்து நாடுகளிலும் அச்சத்தை விளைவித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரத்து 698 பேர்.

பிரான்ஸில் லாக்டெளனும்… மிக நீளமான டிராபிக் சிக்கலும்

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 32 லட்சத்து 52 ஆயிரத்து 218 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 93 ஆயிரத்து 909 பேர்.  

பிரான்ஸில் தற்போது இரண்டாம் அலை கொரோனா பரவல் தொடங்கிவிட்டது. பிரான்ஸில் மொத்த கொரோனா பாதிப்பு 13,31,984 பேர். இவர்களில் 1,16,533 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 36,565. இறப்பு விகிதம் 24 சதவிகிதம் என அச்சப்பட வைக்கிறது.

பிரான்ஸில் லாக்டெளனும்… மிக நீளமான டிராபிக் சிக்கலும்

தற்போது சிகிச்சையில் இருப்போர் 11,78,886 பேர். அக்டோபர் 25-ம் தேதியில் 52,010 பேருக்கும்,நேற்று (அக்டோபர் 30) 49,215 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்கும் பலரை ராணுவ விமானம் அதிக தொற்று இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது பிரான்ஸ் அரசு. வேகமாகப் பரவும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக உடனடியாக நாடு முழுவதும் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸில் லாக்டெளனும்… மிக நீளமான டிராபிக் சிக்கலும்

எந்தக் கடைகளும், அலுவலங்களும் இயங்காது. பொதுபோக்குவரத்து முற்றிலுமாக முடங்கிவிட்டது. எவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் எனில், அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

தீடிரென்று அறிவிக்கப்பட்ட லாக்டெளனால், நேற்று மிக நீளமான டிராபிக் ஜாம் ஏற்பட்டது. சுமார் 700 கிலோமீட்டர் அளவுக்கு வாகனங்கள் நின்றதாகச் செய்திகள் சொல்கின்றன. இந்தக் கடும் சிக்கலிலிருந்து பிரான்ஸ் எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்ள போகிறது என்பதே அதற்கு இன்றுள்ள மிக முக்கியமான சவால். இதே நிலை தங்கள் நாட்டுக்கும் ஏற்பட்டுவிடக் கூடும் என சில நாடுகள் முன்னெச்சரிக்கையோடு ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.