“அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை” – எல்.முருகன் பேட்டி!

 

“அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை” – எல்.முருகன் பேட்டி!

கூட்டணியில் இருக்கும் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு நீடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “அதிமுக – பாஜக கூட்டணி தொடருகிறது. எந்த சலசலப்பும் இல்லை. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் தூண்டி விடப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

“அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை” – எல்.முருகன் பேட்டி!

அண்மையில் முதல்வர் வேட்பாளரை பாஜக தான் முடிவு செய்யும் என எல்.முருகன் கூறியிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், ‘முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக் கொள்ளாவிடில் பாஜக தனித்து போட்டியிட வேண்டியது தான். எல்.முருகனின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அமைச்சர்களே எடப்பாடியை ஏற்றுக் கொண்ட பின், எல்.முருகன் சொல்வது ஒரு பொருட்டே இல்லை’ என்றெல்லாம் விமர்சித்தனர். இதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் எல்.முருகன், எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அதிமுக பாஜகவினரிடையே மோதல் போக்கு நீடித்து வருவதால், தேர்தல் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இத்தகைய சூழலில், அதிமுக பாஜக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என எல்.முருகன் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.