3 ஆவது அணியால் எங்க கூட்டணிக்கு பாதிப்பில்லை – எல்.முருகன்

 

3 ஆவது அணியால் எங்க கூட்டணிக்கு பாதிப்பில்லை – எல்.முருகன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாஜக கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. தேமுதிக கூட்டணி அமைக்கிறதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதே போல திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைக் கட்சி கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. மாபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது கட்சி ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.

3 ஆவது அணியால் எங்க கூட்டணிக்கு பாதிப்பில்லை – எல்.முருகன்

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சி, திமுகவில் இருந்து வெளியேறிய ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு நடத்தினார். இதன் மூலம் கமல்ஹாசனும் ஐஜேகே – ச.ம.க புதிய கூட்டணியில் இணையலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. சரத்குமாரின் பேச்சும் இதையே வெளிப்படுத்தியது. இதனால் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே இணைந்து 3ஆவது அணி உருவாகும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

3 ஆவது அணியால் எங்க கூட்டணிக்கு பாதிப்பில்லை – எல்.முருகன்

இந்த நிலையில், மூன்றாவது அணியால் அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் தேர்தல் நிர்வாகக்குழு கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3ஆவது அணி எங்களது கூட்டணியை பலவீனப்படுத்தாது என்றும் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யப்பட்டது முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், பாஜக சார்பில் இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருப்பார்கள் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.