சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மத்தியஸ்தம் செய்கிறதா பாஜக?- எல். முருகன் விளக்கம்

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மத்தியஸ்தம் செய்கிறதா பாஜக?- எல். முருகன் விளக்கம்

மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆளுநர் பன்வாரிலாலின் உடல்நிலையை விசாரித்தேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக பாஜக மாநில மகளிர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், “சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க பா.ஜ.க தரப்பில் மத்தியஸ்தனம் செய்யப்படவில்லை. மத்திய அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் கண் மூடிக்கிட்டு அதை எதிர்ப்பதை மட்டுமே ஸ்டாலின் செய்து வருகிறார். விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்.

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மத்தியஸ்தம் செய்கிறதா பாஜக?- எல். முருகன் விளக்கம்

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். இதற்காக நிறைய தொழில்நுட்பங்கள் கொண்டு வருவது தான் இந்த வேளாண் சட்டம். கன்னியாகுமரியை பொறுத்தவரை பா.ஜ.க பலமுறை வெற்றி பெற்றுள்ளது. அது பலமான பகுதி. வேட்பாளர் குறித்து மத்திய தலைமை முடிவு செய்யும்” எனக் கூறினார்.