”தமிழகத்தில் பாதி மாவட்டங்களை கவர்ந்துவிட்டோம்” கெத்துக்காட்டும் எல். முருகன்

 

”தமிழகத்தில் பாதி மாவட்டங்களை கவர்ந்துவிட்டோம்” கெத்துக்காட்டும் எல். முருகன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன், “பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை வெற்றிவேல் யாத்திரையிலிருந்தே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம். அதன் மூலமாக தமிழகத்தில் பாதி மாவட்டங்களை கவர்ந்து விட்டோம். தற்போது “பிரதமர் மோடி விவசாயிகளின் நண்பன்” என்ற ஒரு திட்டத்தின் மூலம் சுற்றுப்பயணம் தொடங்கி நாளையில் இருந்து மூன்று நாட்கள் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளேன்.

”தமிழகத்தில் பாதி மாவட்டங்களை கவர்ந்துவிட்டோம்” கெத்துக்காட்டும் எல். முருகன்

ரஜினியின் வருகை பற்றி சொல்ல வேண்டும் என்றால், யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அவர் தேசிய சிந்தனை உள்ளவர், அவர் கட்சி ஆரம்பித்த பின்னராக எனது கருத்தை சொல்கிறேன். கூட்டணிக் கணக்குகள் குறித்து எங்கள் தேசிய தலைமை எப்படி வழிகாட்டுகிறதோ அதன்படி செயல்படுவோம். வரும் நாட்களில் அது தெரியவரும்” எனக் கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலித்துள்ளது. எனவே வேளாண் திட்டத்திலுள்ள நிறைகள் குறித்து எல்.முருகன் டெல்டா மாவட்ட விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.