இரண்டு நாளில் முடிவு ; தேமுதிக நிலை என்ன? எல்.முருகன்

 

இரண்டு நாளில் முடிவு ; தேமுதிக நிலை என்ன? எல்.முருகன்

அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் தாமதம் இல்லை என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாளில் முடிவு ; தேமுதிக நிலை என்ன? எல்.முருகன்

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் பாஜக நிர்வாகிகள் எல்.முருகன், சி.டி. ரவி நடத்திய பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாமகவுக்கு 23 சீட்டுகள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கியுள்ள நிலையில், தேமுதிக உடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லை என்று தெரிகிறது.

இரண்டு நாளில் முடிவு ; தேமுதிக நிலை என்ன? எல்.முருகன்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானது. பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக- பாஜக இடையே இழுபறி இல்லை. இரண்டு நாளில் தொகுதி பங்கீடு இறுதியாகும். மு.க. ஸ்டாலின் சொல்வதுபோல. பாஜகவில் ரவுடிகள் பட்டியல் இல்லை.கூட்டணியில் தேதிமுக நிலைபற்றி அதிமுக தான் முடிவு எடுக்கும் ” என்றார். முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தினர். தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக , தேமுதிக உடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் இருவரும் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.