அதிமுக – பாஜக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்? : எல்.முருகன் பதில்!

அதிமுக – பாஜக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்? : எல்.முருகன் பதில்!

கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்த போது, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என அமித்ஷா அறிவித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்? : எல்.முருகன் பதில்!

இதைத் தொடர்ந்து, அதிமுகவும் பாஜகவும் இணைந்து சட்டமன்றத் தேர்தல் பணியை தீவிரமாக செய்து வருகின்றன. தற்போது தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதிமுகவின் முக்கியமான தொகுதிகளை குறித்து வைத்து பாஜக கேட்பதாகவும் மொத்தமாக 40 தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதிமுக – பாஜக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்? : எல்.முருகன் பதில்!

இந்த நிலையில் அரியலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், “தற்போதைய கூட்டணி தொடரும். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தேசிய தலைமை முடிவு எடுக்கும். முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் பாஜகதான் அதனை அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.