ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கு ; டிஜிபி அலுவலகத்தில் குஷ்பு புகார்!

 

ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கு ; டிஜிபி அலுவலகத்தில் குஷ்பு புகார்!

தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறித்து நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டதாக இன்று காலை பரபரப்பான தகவல்கள் வெளியாகின. குஷ்பு பெரும்பாலும் சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஆக்டிவாக இயங்கி வருபவர். 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் கொண்ட குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது கணக்கில் வேறு ஒரு பெயருடன் படமும் மாற்றம் செய்யப்பட்டதோடு அதில் இருந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கு ; டிஜிபி அலுவலகத்தில் குஷ்பு புகார்!

குஷ்புவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தது ஒரு நபரோ அல்லது குழுவாக என்ற விவரங்கள் எதுவும் இன்னும் தெரியவரவில்லை. இந்த நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, எனது ட்விட்டர் கணக்கில் இருந்த மொத்த பதிவுகளும் நீக்கப்பட்டது. டுவிட்டர் கணக்கை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளேன் என்று கூறினார்.

மேலும், ராகுல் காந்தியின் செல்போனை உளவு பார்ப்பது மூலம் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை என்றும் ஆளுநர் பதவிக்கு வரும் அளவுக்கு எனக்கு வயதாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.