புதிய ஆளுநர்கள் நியமனத்தில் ஏன் ஒரு பெண் கூட இல்லை? – கேள்வியெழுப்பும் குஷ்பு!

 

புதிய ஆளுநர்கள் நியமனத்தில் ஏன் ஒரு பெண் கூட இல்லை? – கேள்வியெழுப்பும் குஷ்பு!

கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் ஒரு பெண் கூட இல்லாதது குறித்து பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகா உள்ளிட்ட எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவு பிறப்பித்தார். கர்நாடகா, ஹரியானா, மிசோரம், இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட் ஆகிய எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். எட்டு மாநிலங்களிலும் ஆண்களே ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் அந்த பட்டியலில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.

புதிய ஆளுநர்கள் நியமனத்தில் ஏன் ஒரு பெண் கூட இல்லை? – கேள்வியெழுப்பும் குஷ்பு!

இந்த நிலையில், ஒரு பெண்ணைக் கூட ஏன் ஆளுநராக தேர்ந்தெடுக்கவில்லை என குடியரசுத் தலைவருக்கு பாஜக நிர்வாகி என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குடியரசுத்தலைவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். எட்டு மாநிலங்களிலும் ஆளுநர் இடத்திற்கு தகுதியான ஒரு பெண்ணை கூட நீங்கள் பார்க்கவில்லையா? ஏன் இந்த பாகுபாடு? நீங்கள் இவ்வாறு செய்வது வேதனையானது. மிகவும் காயப்படுத்துகிறது/ உங்களை நான் புண்படுத்தவில்லை என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் இந்த பதிவு உற்று நோக்கப்படுகிறது.