உங்க அப்பா பெயரை ஒதுக்கிட்டு வாருங்க… கார்த்தி சிதம்பரத்துக்கு குஷ்பு சவால்!

 

உங்க அப்பா பெயரை ஒதுக்கிட்டு வாருங்க… கார்த்தி சிதம்பரத்துக்கு குஷ்பு சவால்!

தஞ்சை அடுத்த திருவையாற்றில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் தற்பொழுது இங்கு திமுக, காங்கிரஸை விமர்சித்ததற்காக வரவில்லை. யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. நாட்டிலேயே மிகப் பெரிய கட்சியாக பாஜக உள்ளது. கட்சிக்கு என்று ஒரு புரோட்டோகால் உள்ளது. அந்த விதி முறைப்படியே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம். எங்கள் கட்சி பொதுச்செயலாளர் சிடி ரவி சென்னை வரும்போது ஏற்கனவே தெளிவாக தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் தமிழகத்தில் மிகப் பெரிய கட்சி அதிமுக தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். மிகப் பெரிய கட்சி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி உள்ளார். ஒரு புரோட்டாகால் படி தான் அது வரும்.

உங்க அப்பா பெயரை ஒதுக்கிட்டு வாருங்க… கார்த்தி சிதம்பரத்துக்கு குஷ்பு சவால்!

தை பிறந்தால் வழிபிறக்கும் என ஸ்டாலின் தெரிவித்திருப்பது எங்கள் கட்சிக்குதான். ஸ்டாலினை பொறுத்தவரை அவர் எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் என முடிவு செய்யட்டும். ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட நான் தயாராக இருக்கிறேன். கார்த்திக் சிதம்பரம் அப்பா பெயரை ஒதுக்கி வைத்துவிட்டு வரட்டும். எனது பெயருக்கு பின்னால் என் தந்தை பெயர் கிடையாது. பா சிதம்பரம் காங்கிரஸில் இருந்துவிலகி தாமாகவில் இணைந்து தனியாக கட்சி தொடங்கி போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு மீண்டும் காங்கிரஸ்க்கு வந்தவர்.

நாங்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் விசுவாசமாக இருப்போம். பா சிதம்பரம் போன்ற ஆட்கள் எங்களை மாதிரி ஆட்கள் கட்சியில் இருந்தால் தனது மகனுக்கு போட்டியாக வந்து விடுமோ என பயந்து எங்களை மாதிரி ஆட்களை வெளியே தள்ளுவதற்கு முயற்சிப்பார். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நான் தேர்தலில் போட்டியிட போகிறேனா என்பது பற்றி எனக்கே தெரியாது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு முடிவு கட்ட ஒரு சட்டம் இயற்றும் வரை இதுபோன்ற வன்கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். வேளாண் மசோதாவை சரியாகப் படித்துப் பார்த்தால் அது அவர்களுக்கு சாதகமான மசோதா. திமுக 2016 தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதை அவர்கள் படித்து பார்த்துவிட்டு மன்னிப்பு கேட்கட்டும் பிறகு அதனைப் பற்றி பரிசீலிக்கலாம்” எனக் கூறினார்.