நாளை பாஜகவில் இணைகிறார் குஷ்பு

 

நாளை பாஜகவில் இணைகிறார் குஷ்பு

காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார்.

நாளை பாஜகவில் இணைகிறார் குஷ்பு

கடந்த சில நாட்களாகவே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இது தமிழக அரசியலில், தற்போதைய பரபரப்பான விஷயங்களில் ஒன்றாக இருந்தஹ்டு. காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்பு, அக்கட்சி நடவடிக்கைகளில் இருந்து கடந்த பல நாட்களாகவே ஒதுங்கியிருந்தார். மேலும் கட்சி மீதும் கட்சி கொள்கை மீதும் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர் எல். முருகனுடன் சமீபத்தில் சுந்தர் சி. சந்தித்து பேசினார். ஆனால் அண்மையில் உ.பி. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கூட குஷ்பு கலந்துகொண்டு தான், காங்கிரஸிலிருந்து விலகுவதாக இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைவதற்காக குஷ்பு, டெல்லி புறப்படுகிறார். நாளை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், குஷ்பு இணைகிறார்.

நாளை பாஜகவில் இணைகிறார் குஷ்பு

திரையுலக பயணங்களை குறைத்துக் கொண்டு , கடந்த 10 ஆண்டுகளாக தீவிர அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார் குஷ்பு. 2010 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த அவருக்கு, அங்கு தலைமைக் கழகப் பேச்சாளர் பொறுப்புதான் அளிக்கப்பட்டது. 2011 சட்டசபை தேர்தல் மற்றும், 2014 நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவுக்காக பிரசாரம் செய்தார். அப்போது, தனக்கு நாடாளுமன்ற வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், கிடைக்காததால் அதிருப்தியில் திமுகவில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர், தேசிய கட்சியில் இணைந்து பணியாற்ற விருப்பம் என அதிரடியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் தற்போது பாஜகவில் குஷ்பு இணையவுள்ளார்.