கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதான குண்டாஸ் : தமிழக அரசு பதிலளிக்க ஆணை!

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதான குண்டாஸ் : தமிழக அரசு பதிலளிக்க ஆணை!

கந்தசஷ்டிகவசம் குறித்து அவதூறு பரப்பிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கந்த சஷ்டி கவசத்தில் உள்ள பாடல் வரிகளை தமிழில் ஆபாசமாக மொழிபெயர்த்து வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சியினர் புகார் அளித்தனர்.

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதான குண்டாஸ் : தமிழக அரசு பதிலளிக்க ஆணை!

இது தொடர்பாக தமிழகத்தில் பிரச்னை வெடித்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததுடன் கறுப்பர் கூட்டத்தின் வீடியோக்கள் அனைத்தும் யூடிபில் இருந்து நீக்கப்பட்டன.

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதான குண்டாஸ் : தமிழக அரசு பதிலளிக்க ஆணை!

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதான குண்டர் சட்டம் ரத்து கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும், காவல் ஆணையரின் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுரேந்திரனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.