காயங்களுடன் சுற்றித்திரியும் ஆண்யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

 

காயங்களுடன் சுற்றித்திரியும் ஆண்யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

மேட்டுப்பாளையம் அருகே காயங்களுடன் சுற்றித்திரியும் ஆண்யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக காட்டு யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது. அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை, 3 நாட்களில் 3 பேரை அடித்துக் கொன்றது. அடுத்தடுத்து யானை தாக்குதலால் 3 பேர் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில். மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் வனப்பகுதியில் ஒற்றை யானை மக்களை அச்சுறுத்தி வருவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

காயங்களுடன் சுற்றித்திரியும் ஆண்யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இடது முன்னங்கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரியும் அந்த ஆண் யானை, செல்லும் வழியில் காணும் மக்களை அடித்துக் கொன்று விடுவதாக கூறப்படுகிறது. யானை காயம் அடைந்ததால் அதனை பிடித்து சிகிச்சை அளிப்பது எளிய காரணம் இல்லை என்பதால், அதனை பிடிக்க 2 கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.

காயங்களுடன் சுற்றித்திரியும் ஆண்யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

கும்கி யானைகள் மூலம் காயமடைந்த யானையை பிடித்து, ஊசி மூலம் மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்க திட்டமிட்ட வனத்துறையினர், ஆண் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். யானைக்கு சிகிச்சை அளித்த பின்னர் அதனை மீண்டும் காட்டுப்பகுதியில் விட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.