கடவுள் பக்தி உண்மையென்றால் வேல் இல்லாமல் பாஜகவினர் முருகன் சிலையுடன் செல்லுங்கள் நாங்களும் வருகிறோம்- கே.எஸ்.அழகிரி

 

கடவுள் பக்தி உண்மையென்றால் வேல் இல்லாமல் பாஜகவினர் முருகன் சிலையுடன் செல்லுங்கள் நாங்களும் வருகிறோம்- கே.எஸ்.அழகிரி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர்கள், சஞ்சய்தத், சிரிவெல பிராசாத், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், எம்.பி. ஜோதிமணி ஆகியோர் பங்கேற்றனர். மாநாடை தொடர்ந்து, ஏர்கலப்பை யாத்திரை துவக்க விழா மாநாடு நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, 350க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, “50 ஆண்டுகாலமாக ஆட்சியில் இல்லையென்றாலும், ஆளுங்கட்சிக்கு நிகராக இந்த எண்ணிக்கையில் கூட்டம் நடத்தப்பட்டு வருவது, தமிழகத்தில் காங்கிரஸ் வேரூன்றி உள்ளதற்கு சாட்சி. சாமானியர்கள் தான் உயிரோட்டமான கட்சியை நடத்த முடியும். இது சாமானியர்களின் கூட்டம். அங்கொன்றும், இங்கொன்றுமாக பெறும் தோல்வியை சுட்டிக்காட்டி தலைமையை பற்று தவறாக கூறுகிறார்கள். வெற்றி மட்டுமே பெறும் கட்சியை காண்பிக்க முடியுமா? வெற்றி, தோல்வி தான் ஜனநாயகம். வசதியானவர்களுக்கு மத்தியில், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் செல்லக்குமார் போன்ற ஏழ்மை உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. எம்.பி.யாக 50 கோடி ரூபாயாவது செலவு செய்ய வேண்டும், பணம் இல்லாமல் நாடாளுமன்றம் செல்ல முடியாது என தமிழகத்தில் நிலவிவரும் சூழலில் ஏழ்மை உறுப்பினருக்கும் வாய்ப்பு வழங்கியது ராகுல் காந்தி. இது வேறு எந்த கட்சியிலும் நடக்காது.

கடவுள் பக்தி உண்மையென்றால் வேல் இல்லாமல் பாஜகவினர் முருகன் சிலையுடன் செல்லுங்கள் நாங்களும் வருகிறோம்- கே.எஸ்.அழகிரி

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்று விவசாயத்தில் பெரிய தவறை மோடி அரசு செய்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாமல் போகும், ஏனெனில் அது சட்டத்தில் இல்லை. வாயாக சொல்லும் மோடி, ஏன் சட்டத்தில் அதை இடம்பெற வைக்கவில்லை. ஹிட்லர், முசோலினி தொடர்ச்சியாக மோடி ஆட்சி செய்கிறார். 75,000 கோடி கடனை ரத்து செய்தது மன்மோகன் சிங் அரசு. 7,000 கோடி கடனை ரத்து செய்தார் கலைஞர். ஆனால், இப்போது எத்தனை கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது? இதை மட்டும் கேளுங்கள். காங்கிரஸ் கட்சியில் இந்துக்கள் இல்லாதது போலவும், இந்து மதத்திற்கு எதிரானது போலவும், நாத்திகவாதி போலவும், பாஜக இந்து மதத்தை காப்பது போலவும் சில ஊடகங்கள் தவறாக சித்தரிக்கிறது. ஆன்மீகம் என்பது வேறு, மதம் என்பது வேறு.

உண்மையில் கடவுள் பக்தி இருந்தால், வேலை விடுத்து, முருகன் சிலையைதான் தூக்கி செல்ல வேண்டும். அப்படி செய்தால் நாங்களும் வருவோம். நேருவுக்கு, மதம், கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், இந்த இரண்டும் மீது நம்பிக்கை கொண்ட காந்தியின் சீடர் நேரு ஆவர். அது தான் ஜனநாயகம். அமித்ஷாவை பார்த்து எதிர்க்கட்சி அஞ்சும் என முருகன் சொன்னார். அவர் என்ன ரவுடியா, கொலைகாரராக? ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., அமித்ஷாவை வணங்கியது ஜெயலலிதா முன் வணங்கியது போன்று இருந்தது” எனக் கூறினார்.