பாரபட்சம் பார்க்காதீங்க… மோடியை வெளுத்து வாங்கும் கே.எஸ்.அழகிரி!

 

பாரபட்சம் பார்க்காதீங்க… மோடியை வெளுத்து வாங்கும் கே.எஸ்.அழகிரி!

தடுப்பூசி விநியோகத்தில் பாரபட்ச அணுகுமுறையை தவிர்த்து சீராக தடுப்பூசி விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்தே தெளிவற்ற கொள்கைகளை பாஜக நடைமுறைப் படுத்துகிறது. இதுவரை மூன்று வித கொள்கைகள் அறிவித்துள்ளது. தொடக்கத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் கடமை மத்திய அரசுக்கு இருப்பதாக கூறி வந்த பாஜக தற்போது மாநில அரசுகளின் தலையில் சுமத்தி விட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மாநில அரசுகளுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்யும் கொள்கையை அறிவித்து அதனை நடைமுறைப் படுத்தியது.

பாரபட்சம் பார்க்காதீங்க… மோடியை வெளுத்து வாங்கும் கே.எஸ்.அழகிரி!

இதில் பாஜக அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறதத. எதன் அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது என்பதே தெரியவில்லை. பாஜக ஆளுகிற மாநிலங்களில் அதிக தடுப்பூசி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 7.88 கோடி மக்கள் தொகை. இங்கு 1 கோடியே 96 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பாஜக ஆளும் குஜராத் மக்கள் தொகை 6.48 கோடி. அங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சம். இந்த இரண்டு மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தாலே பாஜக அரசு பாரபட்சம் அணுகுமுறையுடன் செயல்படுவது தெளிவாக தெரிகிறது.

இது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகவே கருத வேண்டியிருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டியது பிரதமர் மோடியின் கடமை. தனது சொந்த மாநிலத்திற்கு அவர் வழங்கும் சலுகை பிரதமர் பதவிக்கு அழகல்ல. பாரபட்சமான அணுகுமுறையை தவிர்த்து அனைத்து மாநிலங்களுக்கும் சீராக தடுப்பூசி விநியோகம் செய்ய வேண்டும். குஜராத் மாநிலத்திற்கு மட்டும் பிரதமராக செயல்படாமல் அனைத்து மாநிலங்களுக்கும் சமநிலை தன்மையோடு பிரதமராக செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.