மோடியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : கே.எஸ்.அழகிரி காட்டம்!

 

மோடியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : கே.எஸ்.அழகிரி காட்டம்!

மத்திய பாஜக அரசு தடுப்பூசி விநியோகம் செய்வதில் பாகுபாடு காட்டுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்களை கொரோனாவில் இருந்து காக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?. முழு அடைப்பு என்பது கொரோனாவுக்கான தீர்வு அல்ல. கொரோனா நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மோடியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : கே.எஸ்.அழகிரி காட்டம்!

நாட்டிலுள்ள மக்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக மத்திய பாஜக அரசு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஏன்? தமக்கு வாக்களித்து பிரதமர் ஆக்கிய மக்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் பிரதமர் மோடியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தடுப்பூசி விநியோகத்திலும் பாஜக அரசு பாகுபாடு காட்டுகிறது. பாஜக ஆளும் குஜராத்துக்கு அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் மகாராஷ்டிராவுக்கு குறைவான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு ஒரு நீதி.. குஜராத்துக்கு ஒரு நீதியா?.

மோடியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : கே.எஸ்.அழகிரி காட்டம்!

முதன்முதலில் பொதுமுடக்கம் அமல்படுத்திய போது பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர 21 நாட்கள் கூட தேவைப்படாது என்றார். ஆனால் இப்போதைய நிலை என்ன?. ஒரு கோடியே 38 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதான் மோடியின் கொரோனா எதிர்ப்புப் போரினால் கிடைத்த பலனா?. எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் பிரதமர் மோடி, பாஜக பிரதமராக செயல்படாமல் இந்திய பிரதமராக செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.