கோழிக்கோடு விமான விபத்தில் எழுப்பப்படும் கேள்விகள் -இயற்கை மீது பழி போட்டு தப்பிக்கும் அதிகாரிகள்.-மூடி மறைக்கப்படுகிறதா பல உண்மைகள்?

கோழிக்கோடு விமான விபத்தில் எழுப்பப்படும் கேள்விகள் -இயற்கை மீது பழி போட்டு தப்பிக்கும் அதிகாரிகள்.-மூடி மறைக்கப்படுகிறதா பல உண்மைகள்?

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்துக்கு மழைதான் காரணமென்று அங்கு ஆய்வு செய்த மத்திய விமான ஒழுங்கு முறை வாரியம் (டிஜிஏசி )தெரிவித்துள்ளது .மேலும் இனி அடிக்கடி கனமழை பெய்யும் விமான நிலையங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தணிக்கை செய்யப்படும் என்று கூறியுள்ளது.இது இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை நிர்வகிக்கிறது ,இருந்தாலும் டெல்லி ,மும்பை ,ஹைதராபாத் ,பெங்களூரு விமான நிலையங்களை தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது

கோழிக்கோடு விமான விபத்தில் எழுப்பப்படும் கேள்விகள் -இயற்கை மீது பழி போட்டு தப்பிக்கும் அதிகாரிகள்.-மூடி மறைக்கப்படுகிறதா பல உண்மைகள்?

கடந்த வெள்ளியன்று 190 பேருடன் கோழிக்கோடு விமான நிலையத்தில் மழை பெய்த போது நடந்த விமான விபத்தில் 18 பேர் கொல்லப்பட்ட நிலையில் ,அங்கு விமான ஒழுங்கு முறை வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு மழைதான் இந்த விபத்துக்கு காரணம் என்று எப்போதும் போல இயற்கை மீது பழி போட்டு விட்டு போய் விட்டார்கள் .ஆனால் சில வல்லுநர்கள் இப்படிப்பட்ட மழை பெய்யும் போது சில நுணுக்கங்களை கையாள ஆலோசனை இதற்கு முன்பே கூறியுள்ளதாகவும் அதை அலட்சியப்படுத்தியதால்தான் இந்த விபத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது .இதேபோல் 2010ம் ஆண்டு மங்களூருவில் இப்படி ஒரு விமான விபத்து நடைபெற்றது .பெரும்பாலும் அரசால் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களில் மட்டுமே அடிக்கடி இப்படி ஏன் விபத்து நடக்கிறது என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர் .தனியார் நிர்வகிக்கும் டெல்லி ,மும்பை ,பெங்களூரு ,ஹைதராபாத் விமான நிலையங்களில் மழையே பெய்வதில்லையா? அப்போது எந்த விமானியும் விமானத்தினை தரை இறக்குவதில்லையா என்றும் பலர் கேட்டனர் .

கோழிக்கோடு விமான விபத்தில் எழுப்பப்படும் கேள்விகள் -இயற்கை மீது பழி போட்டு தப்பிக்கும் அதிகாரிகள்.-மூடி மறைக்கப்படுகிறதா பல உண்மைகள்?